ஏன் எதிரி மாதிரி பார்க்கிறீங்க.. ஒபெக் நாடுகளை விட்டு வெளியே போக மாட்டோம்.. அடம் பிடிக்கும் ஈரான்

ஜெனிவா : ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் நடந்து வரும் பிரச்சனைகள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. எனினும் ஒபெக் அமைப்பில் சில நாடுகள் அமெரிக்காவுக்கும், சில நாடுகள் ஈரானுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஏன் சில நாடுகள் அமெரிக்காவுக்கு பயந்து ஈரானை எதிர்த்தும் வருகின்றன. இந்த நிலையில் அதுபோன்ற நாடுகள் ஈரானை எதிர் நாடு போல் பார்த்து வருகின்றன என்றும் கூறியுள்ள பிஜான்.

இந்த நிலையில் ஈரானின் எண்ணெய் வளதுறை அமைச்சர் பிஜான் ஷங்கானே, ஈரான் எந்த தவறும் புரிய வில்லை, ஏன் எங்களை எதிரி போல் பார்க்கீறீர்கள். அப்படி பார்த்தாலும் சரி, நாங்கள் ஓபெக் நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற மாட்டோம் என்றும் கூறியுள்ளாராம்.

மேலும் இதுகுறித்து கூறியுள்ள பிஜான் ஷங்கானே, ஈரானுக்கு ஒபெக் அமைப்பு விட்டு வெளியேறும் எந்தவொரு திட்டமும் இல்லை. அதோடு ஒபெக் உறுப்பினர்கள் சிலர் சில அரசியல் ஆதாயங்களுக்காக ஈரானையும் வெனிசுலாவையும் பயன்படுத்தி வருகின்றனர். இரு நாட்டு பிரச்சனைகள் ஆதாயம் பார்க்க நினைக்கின்றனர் சில உறுப்பினர்கள் என்றும் கூறியுள்ளனர்.

எங்களை தாக்க ஆயுதமாக கச்சா எண்ணெய்

எங்களை தாக்க ஆயுதமாக கச்சா எண்ணெய்

அதோடு அவர்களுக்கு நாங்கள் எதிரி ஒன்றும் இல்லை. அவர்கள் ஏன் எங்கள் மீது எதிரிகள் போல பகைமை காட்டுகின்றனர். அதோடு உலக சந்தையில் அவர்கள் எங்களுக்கு எதிராக, எங்களை தாக்க கச்சா எண்ணெயை ஒரு ஆயுதமாக காட்டுகின்றனர். இது மிக வேதனை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். எனினும் அந்த தலைவர்கள் பற்றிய பெயரையும் வெளியிடவில்லை.

அமெரிக்காவால்- சவுதி- ஈரான் .எமிராட் இடையே அதிகரிக்கும் அழுத்தம்

அமெரிக்காவால்- சவுதி- ஈரான் .எமிராட் இடையே அதிகரிக்கும் அழுத்தம்

அமெரிக்கா ஈரானிடன் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று கூறிய பிறகே, ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் மற்றும் ஐக்கிய அரபு நாடு எமிராட்டுக்கும் இடையே பிரச்சனைகள் வலுபெற்று வருகின்றன. அதிலும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று கூறிய அமெரிக்கா அரசு அதற்காக சவுதி அரேபியாவிடம் உற்பத்தியை அதிகரிக்க கூறியதும் பல அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

தெக்ரானுக்கு உதவி புரிவதாக கட்டுக்கதைகள்

தெக்ரானுக்கு உதவி புரிவதாக கட்டுக்கதைகள்

கடந்த வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு தலைமையிலான அரசு, ஈரானின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களை பட்டியியலிட்டது. அது மட்டும் அல்லாமல் தெக்ரான் புரட்சியாளர்களை மறைமுகாமாக இந்த நிறுவனங்கள் ஆதரிப்பாதாக கூறியுள்ளது.

கங்கனம் கட்டிக் கொண்டு அலையும் அமெரிக்கா?

கங்கனம் கட்டிக் கொண்டு அலையும் அமெரிக்கா?

அமெரிக்கா இவ்வகையில் ஈரான் ராணுவத்துக்கு பொருளாதார பிரச்சனையை எப்படியேனும் ஏற்படுத்த வேண்டும் என எண்ணியது. எப்படியாவது ஈரானின் வருமானத்தை குறைத்தாக வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு அலைகிறது அமெரிக்கா. ஆனால் சில ஆய்வாளர்கள் இதை குறியீடு என்றே அழக்கின்றனர்.

ஈரான் பொருளாதாரத்தை குலைக்க வேண்டும்?

ஈரான் பொருளாதாரத்தை குலைக்க வேண்டும்?

ஆமாங்க.. ஈரானின் பொருளாரத்தை எப்படியேனும் சீர்குலைக்க வேண்டும் என அமெரிக்கா அலைகிறது. ஆனால் அது ஒவ்வொரும் முறையும் முடியாமலேயே போகிறது. ஆக அமெரிக்கா புதிய புதிய வழிமுறைகளை வகுத்துக் கொண்டே இருக்கிறது என்கிறார் பிஜான்.

பிரச்சனையிலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டோம்

பிரச்சனையிலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டோம்

மேலும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்காக அமெரிக்காவின் நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் ஒரு போதும் இதிலிருந்து பின் வாங்க மாட்டோம்.

அணுசக்தி- பாலிஸ்டிக்ஸ் திட்டத்தில் தனி இடம் இலக்கு

அணுசக்தி- பாலிஸ்டிக்ஸ் திட்டத்தில் தனி இடம் இலக்கு

அதோடு ஈரான் தனது அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக்ஸ் ஏவுகனை திட்டங்களில் தன்னை நிலைப்படுத்தி தனித்துவமாக இருக்க விரும்புகிறது. அதோடு சிரியா ஏமன், லெபனான் ஈராக் குழுக்களோடு செயல்படும் என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+