ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த 13ஆம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரானது என இஸ்ரேல் அப்போது தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரான் ராணுவமும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழலில் தான், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் களமிறங்கியது. அந்த வகையில் ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து, இதற்கு முன் பார்த்திராத பேரழிவை அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். ஆனால் தற்போது, அதிபர் டிரம்பின் கூற்றுக்கு ஈரான் அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி கூறுகையில், "போர் நிறுத்தம் தொடர்பாகவோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ இதுவரை எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது வரை இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.
இஸ்ரேலுக்கு எதிரான போரை நிறுத்துவது பற்றிய இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். அந்த முடிவை எங்களுடைய தலைவர் எடுப்பார். இந்த விஷயத்தில் வேறு நாடுகளின் தலையீட்டிற்கு அனுமதி கிடையாது. இந்த போரை மேற்கத்திய நாடுகளே தொடங்கின. அதனால், போரை நிறுத்துவது குறித்து ஈரான் தான் முடிவு செய்யும். இஸ்ரேல் போரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம். ஈரான் மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்தினால், நாங்கள் போரை நிறுத்திக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா இருக்கிறார். ஆனால், ஐ.நா. விதிகளை மீறி பெரும் தவறு செய்துள்ளது. சர்வதேச சட்டங்களையும், அணு ஆயுத பரவல் தடை சட்டங்களையும் மீறும் வகையில், ஈரானின் அணு ஆயுத நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐ.நா.வில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாடும் இந்த ஆபத்து தரும் சட்டவிரோத மற்றும் குற்ற அணுகுமுறையால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா.வின் ஆவணங்கள் மற்றும் அதன் பிரிவுகளின்படி, சுய பாதுகாப்புக்கு அனுமதியளிக்கும் வகையில், ஈரான் தன்னுடைய இறையாண்மை, நலன் மற்றும் மக்களை பாதுகாக்க அனைத்துவிதமான வாய்ப்புகளையும் வைத்திருக்கிறது" என தெரிவித்தார்.
இதனால், ஈரான் போரை தீவிரப்படுத்தும் முயற்சியில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் கடுமையான தாக்குதலை தொடுத்தது. இதனைத் தொடர்ந்து அவர், கடந்த ஞாயிறுக் கிழமை மதியம் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் மற்ற உயர் அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனால், ரஷ்யாவின் ஆதரவு மற்றும் உதவியை அவர் கோருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் தான், தற்போது போர்நிறுத்தம் பற்றிய அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு வெளியானது. ஆனால், அதனை தற்போது ஈரான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!



Click it and Unblock the Notifications