ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து வரும் நிலையில் அதற்கு மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்த கூடிய முடிவு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ள இந்தப் புதிய முடிவானால் ஈரான் உடனான வர்த்தகப் பரிமாற்றங்கள் புதிய வழிமுறையில் தொடர்ந்து செயல்படும் என்று தெரியவந்துள்ளது.
5 நாடுகள்
இதற்கிடையில் திங்கட்கிழமை பிரட்டன், பிரான்ஸ், ஜெர்மெனி, ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசியது மட்டும் இல்லாமல் டிரம்பின் முடிவை எதிர்த்து ஈரானுக்கு ஆதரவு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
அதற்காக மத்திய மற்றும் வணிக வங்கிகளைத் தவிர்த்து புதிய பணப் பரிமாற்ற முறையினைச் செயல்படுத்த ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது.
ஒபாமா - டிரம்ப்
2015-ம் ஆண்டுப் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் ஈரானுக்கு அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து வந்த டொணால்டு டிரம்ப் அதில் இருந்து மே மாதம் விலகியது மாட்டும் இல்லாமல் ஈரான் மீது பொருளாதாரத் தடையினையும் விதித்துள்ளார்.
பிற நாடுகளின் ஆதரவு
ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியிருந்தாலும் அதில் உள்ள பிற முக்கிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவு அளித்து வருகிறன.
கச்சா எண்ணெய்
இந்தியா உட்படப் பல உலக நாடுகளுக்குப் பெறும் அளவில் ஈரானில் இருந்து தான் கச்சா எண்ணெய் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா விதித்துள்ள தடையினை அடுத்து இந்தியா உட்படப் பல நாடுகளால் அங்கு இருந்து கச்சா என்நெய்யினை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் உள்ளன.
கோரிக்கை நிராகரிப்பு
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா இந்தியாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை அமெரிக்கா நிராகத்தது மட்டும் இல்லாமல் மீறினால் உங்கள்மீது தடை விதிக்கப்படும் என்று மிரட்டியது.
மிரட்டலுக்கு அடிபணிந்த இந்தியா
அதே நேரம் ஈரான் அரசும் ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய்யினை இந்தியா இறக்குமதி செய்துகொள்ளலாம் என்ற சலுகையினை அளித்தது. ஆனால் எங்கு அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் பாதிப்பு ஏற்பட்டுப் பொருளாதாரச் சரிவு நேரிடுமோ என்று மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்து நவம்பர் மாதம் முதல் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்வதில் இருந்து பின்வாங்கியுள்ளது.
மறு பரிசீலனை செய்யுமா?
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்கனவே விண்ணைத்தொட்டு வரும் நிலையில் ஐரோப்பிய யூனியன் உட்பட 5 நாடுகளின் முடிவினை அடுத்து இந்திய அரசு ஈரான் உடனான வர்த்தகத்தினைத் தொடர்வது குறித்து மறு பரிசீலனை செய்யுமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?



Click it and Unblock the Notifications