டிரம்ப் தொடர்ந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈரானுக்குள் இறங்கி தாக்குதலை நடத்தி ஈராக், வெனிசூலா போல் அந்நாட்டை கைப்பற்ற திட்டம் இருப்பதாக கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஈரான் ராணுவம் அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது பினை கைதிகளாக பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்தாலோ 5 பில்லியன் ஈரான் தோமான் பரிசாக அளிக்க உள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுவே பெண்கள் கொன்றால் பரிசு தொகை இரட்டிப்பாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரம்ப்-ன் மிரட்டலை தொடர்ந்து, தங்கள் நாட்டிற்குள் வரும் அமெரிக்கா ராணுவ வீரர்களை கொல்ல வேண்டும் என்றால் அதற்கு தனிப்பட்ட பரிசை அளிக்க வேண்டும் என மக்கள் மத்தியில் இருந்து பல்வேறு கோரிக்கை வந்த காரணத்தால் இத்தகைய Bounty திட்டத்தை அறிமுகம் செய்வதாக ஈரான் ராணுவத்தின் தலைவர் அமீர் ஹாடாமி தெரிவித்துள்ளதாக ஈரான் அரசு பத்திரிக்கையான IRNA தெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரையில் அமெரிக்கா ராணுவம் ஈரான் நாட்டிற்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. கடைசியாக ஏப்ரல் மாதம் ஈரானில் சிக்கிய அமெரிக்க விமானியை மீட்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஈரானுக்குள் நுழைந்தனர்.
ஈரானில் 2 நாணயம் புழக்கத்தில் உள்ளது ஒன்று ஈரான் ரியால் மற்றொன்று தோமான், இதில் ரியால் அதிகாரப்பூர்வ நாணயம். ஆனால் பணவீக்கத்தால் ரியால் அதிக பாதிப்பை எதிர்கொண்டு உள்ள காரணத்தால் மக்களுக்கு எளிய பணபுழக்க முறையை கொண்டு வர தோமான் அறிமுகத்திற்கு வந்தது. இதில் ஒரு தோமான் என்பது 10 ரியால்-க்கு சமமானது, மேலும் தோமான் ஈரான் நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்தக்கூடியது, ரியால் சர்வதேச சந்தையில் பயன்படுத்தக்கூடியது.
இதன் மூலம் 5 பில்லியன் தோமான் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 50000 ரூபாயாகும். டாலர் மதிப்பில் 30000 டாலராகும்.
ஏற்கனவே டிரம்ப்-ன் தலைக்கு பெரிய தொகை அறிவிக்கப்பட்டு இருக்கும் வேளையில் தற்போது அமெரிக்க ராணுவ வீரர்களின் தலைக்கும் குறிவைத்துள்ளது ஈரான் ராணுவம், இத்தகைய பரிசு தொகை அறிவிப்பு அமெரிக்கா-வை தாண்டி அமெரிக்காவுடன் துணை நிற்கும் நாடுகளையும் அதிரவைத்துள்ளது.
வளைகுடா நாடுகள் டிரம்ப் மீதும், அமெரிக்க அரசின் மீதான நம்பிக்கையை இழந்திருக்கும் வேளையில் ஈரானின் இத்தகைய அறிவிப்பு அமெரிக்காவிடம் இருந்து பெரும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே துருக்கியில் டிரம்ப் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடியதை ஈரான் கிண்டல் செய்து வரும் வேளையில் ஈரான் ராணுவத்தின் Bounty திட்டம் பெரும் அதிர்ச்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொடுக்கும்.


Click it and Unblock the Notifications