மீண்டும் ஆரம்பித்துள்ள பழி வாங்கும் படலம்.. எண்ணெய் கப்பல் தாக்குதல்.. விலை அதிகரிக்குமா?

Recommended Video

வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்- ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்-வீடியோ

தெஹ்ரான்: சவுதி கடற்கரையில் செங்கடல் வழியாக பயணித்த ஈரானிய எண்ணெய் கப்பலை இரண்டு ராக்கெட்டுகள் தாக்கியதாக, ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெஹ்ரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து பல மாதங்களாக ஏற்பட்டு வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இப்பகுதியில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்டதையடுத்து, இந்த தாக்குதல், சவுதி அரேபியாவால் நிகழ்ந்திருக்குமோ என்ற பதற்றமும் நிலவி வருகிறது, எனினும் சவுதியிடம் இருந்தும் உடனடியாக எந்த வித சமிக்கையும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஈரானின் எண்ணெய் கப்பல்

ஈரானின் எண்ணெய் கப்பல்

இந்த தாக்குதலில் பெயர் எதுவும் இல்லாத இரண்டு ஸ்டோர் ரூம்கள் சேதமடைந்துள்ளதாகவும், சவுதி துறைமுக நகரமான ஜித்தா அருகே செங்கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகவும் அந்நாட்டு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதே அந்த நாட்டின் ஐ.ஆர்.என்.ஏ நியூஸ் ஏஜென்ஸி, தாக்கப்பட்ட அந்த எண்ணெய் கப்பல் ஈரானின் நேஷனல் ஈரானியன் டேங்கர் கோ.. என்ற நிறுவனத்தை சேர்ந்த சபிட்டி என்றும் அடையாளம் கண்டுள்ளது.

அமெரிக்கா- ஈரான் பிரச்சனை

அமெரிக்கா- ஈரான் பிரச்சனை

அந்தக் கப்பல் கடைசியாக அதன் காண்கானிப்பு சாதனங்களை ஆகஸ்ட் மாதம் ஈரானிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் அருகே இயக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரசீக வளைகுடாவின் முகப்பில் உள்ள ஹார்மூஸ் ஜலசந்திக்கும் அருகே, எண்ணெய் டேங்கர்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. எப்போது அமெரிக்கா ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியதோ அதிலிருந்தே, ஈரானின் பொருளாதாரத்தை குலைக்கும் விதமாகவே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொருளாதார தடை

பொருளாதார தடை

இந்த நிலையிலேயே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என்றும், மீறி ஈரானுடன் வர்த்தகம் தொடர்ந்தால் அவர்கள் மீதும் பொருளாதார தடை விதிக்கும் என்றும் அமெரிக்கா பயமுறுத்தியது.ஏற்கனவே அமெரிக்கா - சீனா வர்த்தக போரால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், மற்ற நாடுகள் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தின. இந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஈரானை உளவு பார்ப்பதாக ஈரானும், ஈரானின் விமானத்தை அமெரிக்காவும் மாறி தாக்குதல் நடத்தின.

சவுதியின் எண்ணெய் ஆலையும் தாக்குதல்

சவுதியின் எண்ணெய் ஆலையும் தாக்குதல்

இது போதாவென்று சவுதி அரேபியாவின் எண்ணெய் வயலும், எண்ணெய் ஆலையும் தாக்கப்பட்டது. இதனை செய்தது ஈரான் தான் என்று சவுதி கூறி வந்தது. ஆனால் ஈரான் இதை மறுத்தது. இந்த நிலையில் ஏமன் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டதற்காக அடையாளம் ஈரானிலேயே இருப்பதாக சவுதி குற்றம் சாட்டியது. இந்த நிலையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதையடுத்து, வளைகுடா பகுதிகள் பெரும் பதற்றமான நிலையிலேயே காணப்படுகின்றன.

இந்தியாவுக்கு தான் பாதிப்பு

இந்தியாவுக்கு தான் பாதிப்பு

இந்த அங்காளி பங்காளி சண்டையினால் பாதிக்கப்படபோவது என்பது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் தான். ஏனெனில் மொத்த எண்ணெய் உபயோகத்தில் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே நாம் பெற்று வருகிறோம். இந்த நிலையில் சர்வதேச அளவில் இது போன்ற காரணிகளால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகலாம். இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+