அமெரிக்கா - ஈரான் மத்தியில் மீண்டும் முழு அளவிலான தாக்குதல் துவங்கியிருக்கிறது. இரு நாடுகள் மத்தியிலான அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் முக்கிய கண்டினாக இருந்து ஹார்முஸ் வழித்தடம் ஈரானுக்கு முழு உரிமையை பெறுவது தான், ஆனால் இதில் எவ்விதமான முடிவுகளையும் எடுக்காமல் அமெரிக்கா - ஓமான் இணைந்து ஓமன் கடற்கரை ஓரமாக புதிய வழித்தடத்தை அமைத்து சரக்க கப்பல்களை ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்கா இயக்கி வந்தது. இதை தடுக்கும் வகையில் ஈரான் அவ்வழியாக சென்ற 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதுதான் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான தாக்குதல் மீண்டும் துவங்க முக்கிய காரணமாக அமைந்தது.

அமெரிக்க கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெரும் தாக்குதல்களை ஈரான் மீது செய்து வரும் வேளையில், அமெரிக்க அதிபருக்கும், அமெரிக்கா உளவுத்துறைக்கும் இஸ்ரேல் ஒரு முக்கியமான தகவலை கொடுத்துள்ளது.
அதாவது ஈரான் அரசும், ஈரான் ராணுவமும் டிரம்பை கொல்ல திட்டம் தீட்டுவதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் உளவுத்துறை அமைப்பு தகவல் கொடுத்துள்ளது. இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படும் வேளையில், இஸ்ரேல் மீது அமெரிக்காவுக்கு இருந்த நிலைப்பாடு மாறியுள்ளதால் இஸ்ரேல் உளவுத்துறை கொடுத்த தகவலை அமெரிக்க உளவுத்துறை எப்படி கையாளுகிறது என்பதை பார்க்கும் போது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது.
சிஎன்என் வெளியிட்டுள்ள தகவல் படி, அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் இஸ்ரேல் கொடுத்த இந்த தகவல்கள் ஈரான் மீதான தாக்குதல் மற்றும் போர் தொடுக்கும் டிரம்ப்-ன் முடிவில் influence செய்யும் ஒரு பகுதியாகவே பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் அமெரிக்க உளவுத்துறையில் சிலர் மட்டும் இஸ்ரேலின் தகவலை சற்று எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும் என கூறுகின்றனர்.
காரணம் அமெரிக்கா ஆட்சி நிர்வாகத்தில் இஸ்ரேல் ஆதரவாக இருப்போரின் எண்ணிக்கையும் சற்று அதிகம். இதே இஸ்ரேல் ஜூன் மாதம் டிரம்ப் ஈரானுடன் சமாதானமாக போகவும், போர் தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்லவும் முடிவு செய்த போது இஸ்ரேல் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் அல்லாமல், ஈரானுடன் அமைதி பேச்சுவாத்தைக்காக டிரம்ப் எடுத்த முயற்சிகள் அனைத்தும் சீர்குலைக்கும் பணிகளை இஸ்ரேல் செய்தது.
இக்காலக்கட்டத்தில் டிரம்ப் - பெஞ்சமின் நெதன்யாகு மத்தியில் கடுமையான கருத்து வேறுப்பாடு இருந்தது, டிரம்ப் பெஞ்சமின் நெதன்யாகு-வை திட்டி தீர்த்தார். இதனால் இஸ்ரேலின் இந்த உளவுத் தகவலை சந்தேக கண் உடனே அமெரிக்கா பார்த்து வருகிறது. இதேவேளையில் கடந்த 2-3 வாரங்களாக டிரம்ப் கொல்லப்படுவது குறித்து அமெரிக்க உளவுத்துறை பல்வேறு பிரிவில் தொடர்ந்து தகவலை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications