ஈரான் போரில் அயத்துல்லா அலி கமேனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி நாட்டின் உச்சபட்ச தலைவராக பொறுப்பேற்றார் என ஈரான் அரசு அறிவித்தது.
மொஜ்தபா கமேனி நாட்டின் தலைவராக பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டது முதலே பொதுவெளியில் அவர் தென்படவே இல்லை. தந்தையின் இறுதி சடங்குக்கு கூட அவர் வரவில்லை என சொல்லப்பட்டது. இதனால் அவர் உயிருடன் தான் இருக்காரா இல்லையா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. ஆனால் ஈரான் அரசு மொஜ்தபா கமேனி உயிருடன் தான் இருக்கிறார் அவர் தான் நாட்டை வழிநடத்துகிறார் என தொடர்ச்சியாக கூறி வருகிறது.

இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானே கமேனி உயிருடன் தான் இருக்கிறாரா என்ற சந்தேகப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, மொஜ்தபா காமேனி பொதுவெளியில் தோன்றவில்லை. எனவே அதிபர் பெசெஷ்கியன் அவரை சந்திக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளார். பெசெஷ்கியன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியதை தொடர்ந்து மொஜ்தபா கமேனியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம்.
வழக்கமான முறைப்படி அரசு இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ இந்த சந்திப்பு நடக்கவில்லை. அதிபர் பெசெஷ்கியனை அவரது வாகனத்திலிருந்து அழைத்து சென்று, அடையாளம் தெரியாத ஓர் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. காரின் ஜன்னல்களுக்கு அடர் நிறத்திலான திரை போடப்பட்டிருந்ததாம், உள்ளே வெளிச்சம் மிகக்குறைவாக இருந்ததால், பெசெஷ்கியானால் அங்கே இருந்தது மொஜ்தபாதானா என அடையாளம் கூட கண்டறியமுடியவில்லை.
இந்த சந்திப்பு சில நிமிடங்கள் மட்டுமே நடந்ததகவும், ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து ஹேண்ட் ஷேக் கூட செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. முகத்தை கூட தெளிவாக பார்க்க முடியவில்லை என சந்திப்பு முடிந்த பிறகு, அதிபர் பெசெஷ்கியன் மிகவும் கோபமாகவும், அவமானமாகவும் உணர்ந்ததாக ஈரான் தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதிபர் அலுவலக வட்டாரங்களின்படி, சந்திப்பு முடிந்து திரும்பிய பெசெஷ்கியன், தன்னிடம் பேசியது உண்மையிலேயே மொஜ்தபாதானா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். வெறும் குரலை மட்டுமே கேட்டதாலும், முகத்தை பார்க்க முடியாத சூழல் இருந்ததாலும், அவர் இந்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறாராம்.
மொஜ்தபா காமேனி, அயத்துல்லாஅ அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலின் போது காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர் பொதுவெளியில் வராததற்கு காரணம் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதே என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தான் யார் தான் நாட்டையும் போரையும் வழிநடத்துகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிபர் பெசெஷ்கியனுக்கும், தற்போதைய தலைமைக்கும் இடையே கொள்கை ரீதியான மோதல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தனது நிர்வாகம் புறக்கணிக்கப்படுவதால் அதிருப்தியில் இருக்கும் அதிபர், பலமுறை ராஜினாமா செய்ய முயன்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ராணுவத்திற்கும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் முரண்பாடு இருப்பதாக சொல்லப்படும் நிலையில் மொஜ்தபா உயிருடன் தான் இருக்காரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

