கத்தார்: ஈரானின் முக்கியமான அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதலை நடத்திய நிலையில் அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.
ஈரான் பதிலடி: கத்தாரில் Al Udeid என்ற இடத்தில் அமெரிக்காவின் விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. சுமார் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்த தளத்தின் கீழ் செயல்படுகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்காவுக்கு சொந்தமான பெரிய விமானப்படை தளம் இது. இந்த விமானப்படை தளத்தின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான்.

ஈரான் அணுசக்தி நிலையங்களை தாக்கிய அமெரிக்கா: கடந்த ஜூன் 13ஆம் தேதியிலிருந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்ற வருகிறது, கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவும் இந்த மோதலில் பங்கு எடுத்துக் கொண்டது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தியது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என தெரிவித்திருந்த ஈரான், கத்தார் நாட்டில் இருக்கக்கூடிய அமெரிக்காவுக்கு சொந்தமான விமான தளத்தின் மீது திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது.
முன்கூட்டியே தெரிவித்த ஈரான்: ஈரான் இந்த தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக தங்களுடைய தூதரக அதிகாரிகள் மூலம் கத்தார் நாட்டு அதிகாரிகளுக்கும் அமெரிக்க விமானப்படை தளத்தில் இருந்தவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தாக்குதலுக்கு முன்பாகவே அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் நேரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைதி பாதையில் பயணிக்க வலியுறுத்தல்: தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் டிரம்ப், தாக்குதலை முன் கூட்டியே தெரிவித்ததற்கு ஈரானுக்கு நன்றி என கூறியுள்ள டிரம்ப், இதன் காரணமாகவே இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்திருக்கிறார். ஈரான் அமைதியை நோக்கி பயணம் செய்யலாம் என்றும் இஸ்ரேலும் அதே பாதையில் செல்ல வேண்டும் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
கத்தார் , சவுதி அரேபியா கண்டனம்: ஈரான் கத்தாரில் இருந்து அமெரிக்காவின் விமானப்படை தளங்கள் மீது 14 ஏவுகணைகளை வீசி இருக்கிறது. இது தாங்கள் எதிர்பார்த்த ஒரு தாக்குதல் தான் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். இதனிடையே அமெரிக்க விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலுக்கு கத்தார் நாட்டு அரசும் சவுதி அரேபிய அரசும் கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார் அரசு ஈரானின் செயல் ஏற்கத்தக்கது அல்ல என கூறியுள்ளது.
ஈராக்கிலும் தாக்குதல்: கத்தார் மீது ஈரான் நடத்திய தாக்குதல் நியாயப்படுத்த முடியாத ஒன்று என கூறி இருக்கும் சவுதி அரேபியா அரசு சர்வதேச சட்டங்களை மீறி ஈரான் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த தருணத்தில் கத்தார் தன்னை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சவுதி அரேபியா வழங்க தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளது. கத்தார் மட்டுமில்லாமல் ஈராக்கில் இருக்கக்கூடிய அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
More From GoodReturns

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்



Click it and Unblock the Notifications