ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அமெரிக்கா , இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பெரிய கவலைகளை ஏற்படுத்தின. ஈரான் உலகிற்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களை தயாரிக்கும் என தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி வந்தன.
ஈரான் - இஸ்ரேல் மோதல்: இந்த சூழலில்தான் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது . கிட்டத்தட்ட 12 நாட்களுக்கு இந்த தாக்குதல் நீடித்தது . இதற்கிடையில் திடீரென ஒரு நாள் அமெரிக்க வான்படைகள் ஈரானுக்கு சொந்தமான ஃபார்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்களை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தின. இந்த வான்வெளி தாக்குதலில் இந்த மூன்று அணுசக்தி நிலையங்களும் பெருமளவில் சேதமடைந்ததாகவும் அங்கே இருந்த யுரேனியம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமையுடன் அறிவித்தார்.

அமெரிக்கா நினைத்ததை சாதித்ததா?: ஆனால் இந்த வான் வெளி தாக்குதல் அமெரிக்காவுக்கு வெற்றியை தந்ததா என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பியுள்ளனர். சர்வதேச அணுசக்தி முகமைக்கான இந்தியாவுக்கான முன்னாள் கவர்னரும் பல்வேறு நாடுகளுக்கான தூதராகவும் இருந்த ஆர். சுவாமிநாதன் இது தொடர்பான தன்னுடைய விரிவான பார்வையை கட்டுரையாக வெளியிட்டுள்ளார். அவருடைய இந்த கட்டுரை பல்வேறு உண்மைகளை போட்டுடைக்கும் வகையில் அமைந்துள்ளது.
400 கிலோ யுரேனியம் என்ன ஆனது?: ஈரான் மீது தாக்குதல்களை தொடர்ந்து சர்வதேச அளவில் ஒரு மிகப்பெரிய விடை தெரியாத கேள்வி எழுந்திருக்கிறது . ஈரானிடம் இருந்த 400 கிலோ அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே சென்றது என்பது தான் அந்த கேள்வி. இந்த யுரேனியத்தை கொண்டு பல அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர் . அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் மிக சாதாரணமாக எதிர்வினை ஆற்றி இருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தேகம் எழுப்பும் ஈரானின் பதிலடி: கத்தாரில் இருந்த அமெரிக்க விமானப்படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது, ஆனால் முன்கூட்டியே தாங்கள் தாக்குதல் நடத்த போவதாக அறிவித்த அங்கிருந்த வீரர்களை வெளியேற வைத்தது. ஈரானின் இந்த அணுகுமுறை தான் சந்தேகத்தை வலுவடைய செய்கிறது என்கிறார் ஆர் சுவாமிநாதன், இந்த பெரிய தாக்குதலில் கூட ஈரான் ஹோர்முஸ் நீரிணை மூடுவதாக அறிவிக்கவில்லை, சர்வதேச அணுசக்தி முகமை உடனான உறவை ரத்து செய்வதாக நாடாளுமன்ற எடுத்த முடிவை ஏற்கவில்லை என அடுத்தடுத்த காரணங்களை இவர் பட்டியலிடுகிறார்.
உண்மை என்ன?: தற்போதைக்கு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டு தாக்குதல்கள் எதுவும் இன்றி மத்தியக்கிழக்கு நாடுகளில் அமைதி நிலவுகிறது. ஆனால் ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் நடத்திய தாக்குதல்கள் உண்மையில் வெற்றி பெற்றனவா என்ற கேள்வி எழாமல் இல்லை என கூறுகிறார். அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தயாரித்த ஆரம்பக்கட்ட சேத அறிக்கை கசிந்து இருப்பதாக கூறுகிறார்.

ஆய்வறிக்கையில் தகவல்: அந்த ஆய்வறிக்கையில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் சில மாதங்களுக்கு மட்டுமே ஈரானின் அணுசக்தி திட்டங்களை தள்ளி வைத்திருக்கலாம் என அஞ்சுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறதாம். அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை நாங்கள் அழித்து விட்டோம் , 400 கிலோ அளவிலான சரிவூட்டப்பட்ட யுரேனியத்தை அழித்துவிட்டோம் என வெளிப்படையாக அறிவித்த நிலையில் பெண்டகன் அறிக்கை இந்த சந்தேகத்தை எழுப்பி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை கோள் படங்கள் : ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை தொடங்குவதற்கு முன்பாக சர்வதேச அணுசக்தி கூட்டமைப்பு ஈரானிடம் 400 கிலோ அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கிறது என்பதை உறுதி செய்திருந்தது. ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி நிலையமாக இருக்கும் ஃபார்டோ அணு ஆலையில் அது வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆலை மீது தான் பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா நடத்தியது அங்கே சேதம் ஏற்பட்டதும் செயற்கை கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இடம் மாற்றம் செய்யப்பட்டதா?: இதுவரை சர்வதேச அளவிலான அதிகாரிகள் இந்த இடத்திற்கு சென்று எந்த அளவுக்கு சேதம் அடைந்திருக்கிறது என்பதை பார்க்க முடியவில்லை. ஜூன் 22இல் தான் அமெரிக்கா இந்த அணு ஆலை மீது தாக்குதல் நடத்தியது ஆனால் ஜூன் 19,20 ஆகிய தேதிகளில் இந்த ஆலை பகுதியில் பல்வேறு லாரிகள் சென்று வந்ததற்கான செயற்கைக்கோள் புகைப்படங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கட்டுரையில் கூறுகிறார்.
கதிர்வீச்சு இல்லை: எனவே இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே ஈரான் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டது என்ற சந்தேகத்தை இது எழுப்புகிறது என கூறியுள்ளார். இந்த அணுசக்தி நிலையங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கே இருந்த யுரேனியம் பாதிக்கப்பட்டிருந்தால் பெரிய அளவிலான கதிர்வீச்சு வெளியாகி இருக்கும் ஆனால் அதற்கான அறிகுறிகளே தென்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை கூறுகிறது என்கிறார்.

தாக்குதலின் அர்த்தம் நீர்த்துபோனதா: அமெரிக்காவின் தாக்குதலையும் தாங்கி யுரேனியம் அங்கேயே பாதுகாப்பாக இருக்கலாம் அல்லது அதற்கு முன்பே அந்த இடத்தில் இருந்து இடமாற்றம் செய்து இருக்கலாம் என சந்தேகத்தை இவர் எழுப்புகிறார். ஐரோப்பிய உளவு அமைப்புகள் ஈரான் தன்னுடைய செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒரே இடத்தில் வைக்கவில்லை பல இடங்களில் பிரித்து வைத்திருக்கிறது என கூறுகிறது. இது உண்மையாக இருந்தால் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு எந்த வித அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.
டிரம்ப் அறிவிப்பு: யுரேனியம் அழிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் ஈரான் அதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றி இருக்கும். ஆனால் இந்த முறை ஈரானின் அணுகுமுறையை பார்த்தால் அது யுரேனியத்தை பாதுகாத்து வைத்திருக்கிறதோ என்ற சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது என கூறுகிறார். கூடிய விரைவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார் , ஆனால் ஈரான் எங்களின் அணுசக்தி நிலையங்களை வேண்டுமானால் நீங்கள் சேதப்படுத்தி இருக்கலாம் ஆனால் எங்களுடைய திறன்களை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்றும் எங்களால் உங்களிடம் சரணடைய முடியாது என்றும் தெரிவித்து இருந்தார்.
மோதலை தீர்மானிக்கும் காரணி: தற்போதைக்கு ஈரான் இஸ்ரேல் மோதல் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர அந்த மோதல்களுக்கான அடிப்படை காரணம் என்பது அப்படியே தான் இருக்கிறது என ஆர். சுவாமிநாதன் தன்னுடைய கட்டுரையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் தான் மேற்கொண்டு இந்த மோதல்கள் எந்த திசையை நோக்கி செல்லும் என்பதை தீர்மானிக்க போகிறது என தெரிவித்துள்ளார்.
நேரில் பார்த்தால் தான் உண்மை வெளிவரும்:சர்வதேச அணுசக்தி முகமையை சேர்ந்த அதிகாரிகள் தாக்குதல் நடந்த பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் இவர் தெரிவிக்கிறார். ஆனால் இந்த 400 கிலோ யுரேனியம் கையிருப்பு அமைதி பேச்சுவார்த்தையில் ஈரானின் கைகளுக்கு பலம் அளிக்கும் வகையில் இருப்பதாக கூறும் இவர் இனி இந்த பிரச்சினை வெடிக்குமா, அல்லது அமைதியை நோக்கியே செல்லுமா என்பதை தீர்மானிக்கும் காரணியாக யுரேனியம் இருப்பு தான் இருக்க போகிறது என அடித்து கூறுகிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!



Click it and Unblock the Notifications