அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தையே இல்லை , சண்டை மட்டும் தான் – ஈரான் திட்டவட்டம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இரு தரப்புமே நாங்க சண்டை தான் செய்வோம் என விடாபிடியாக நிற்கின்றன. அமெரிக்கா ஈரான் மீது பயங்கர தாக்குதல் நடத்துவோம் என அறிவித்துள்ள நிலையில் ஈரான் அமெரிக்காவுடன் இனி சண்டை மட்டும் தான் என அறிவித்துள்ளது.

ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எங்களிடம் இல்லை. நாங்கள் தற்போது எங்களது நாட்டின் தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதாவது பேச்சுவார்த்தை இல்லை அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் உண்டு என்பதையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தையே இல்லை , சண்டை மட்டும் தான் – ஈரான் திட்டவட்டம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த மாதம் ஒரு இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பும் தாக்குதல் நடத்த கூடாது, ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்கள் சுதந்திரமாக செல்ல அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. ஆனால், ஒப்பந்த நிபந்தனைகளை தொடர்ந்து மீறி வருவதாக இரு நாடுகளுமே பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

Also Read

அப்படி கடந்த வாரம் தொடங்கிய சிறிய தாக்குதல் தான் பெரிதாக வளர்ந்து நிற்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அனுமதித்த பகுதிக்கு மாற்றாக வேறு பாதையில் சென்றதாக ஈரான் சில வணிக கப்பல்களை தாக்கிய்து., இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இதனை ஒப்பந்ததை மீறியதாக கூறி அமெரிக்கா தாக்குதலை தொடங்கியதால் ஒரு வார காலமாக பதற்றம் காணப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், அடுத்த வாரம் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், , ஈரான் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் அறிவித்துள்ளார்.

இந்த மோதல் சூழலுக்கு இடையே, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்ததாக கூறப்படுகிறது.

Recommended For You

இரு நாடுகளுமே பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கும் வராமல் சமாதானமும் ஆகாமல் இருப்பதால் கச்சா எண்ணெய் விலை பழைய படி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலரை தொட்டுவிட்டது. நிலைமை சீராகாவிட்டால் விலை இன்னும் உயரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது நடந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்னும் உயரும் வாய்ப்பு தான் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+