ஐயா ட்ரம்பு தொண்டைல கத்தி வெச்சிட்டு பேசு பேசுன்னா எப்புடி பேச? நீங்க வந்து பேசுங்க! ஈரான் பதிலடி!

நியூயார்க் : கடுப்பேற்றும் அளவிற்கு எல்லாவற்றையும் செய்துவிட்டு, தற்போது சமாதான புறாவை விடும் அமெரிக்காவிடம், அதிரடியாக முடியாது என்று கூறியுள்ளது ஈரான்.

ஈரானை எப்படியெல்லாம் கவிழ்க்க முடியும் என்று திட்டமிட்டு, பல நாள்களாக யோசித்து கவிழ்த்த அமெரிக்காவிடம், அதுவும் Trump- பிடம் பேச்சு வார்த்தையா, அது நடக்காது என்றும் கூறியுள்ளது ஈரான்.

ஏற்கனவே விதிக்கப்பட்ட பொருளாதார தடையால் ஆட்டம் கண்டுள்ள ஈரான், இரண்டாவது முறையாக தற்போது விதிக்கப்பட்டுள்ள, இந்த புதிய பொருளாதார தடைகளால் ஈரான் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறியுள்ளது.

ஈரான் பேச்சு வார்த்தையை நிராகரிப்பு

ஈரான் பேச்சு வார்த்தையை நிராகரிப்பு

இது குறித்து ஈரான் நாட்டின் ஐக்கிய நாடுகள் தூதர் மஜித் தாகத் ரவாஞ்சி செய்தியாளர்களிடம், ஈரான் மக்கள் மீதான பொருளாதார போரை அமெரிக்கா நிறுத்த வேண்டும். அமெரிக்காவின் மிரட்டும் இந்த போக்கு தொடரும் பட்சத்தில், பேச்சு வார்த்தையை ஒரு போதும் தொடங்க முடியாது. அச்சுறுத்தல் இருக்கும் வரை, ஈரானும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை தொடங்க வழியே இல்லை. அத்தகைய பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையும் உருவாகவில்லை. என்றும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையையும் நிராகரித்துள்ளது ஈரான்.

பாதுகாப்பு குறித்து ஐ.நா-வை நாடியுள்ளது

பாதுகாப்பு குறித்து ஐ.நா-வை நாடியுள்ளது

அதோடு ஈரானின் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்த உள்ளதாகவும், அதோடு இந்த விஷயத்தில் ஐக்கிய நாடுகளின் தனது பங்களிப்பை வழங்கும்படி கேட்டுள்ளதாகவும் ரவாஞ்சி கூறியுள்ளார்.

பல கோணத்தில் விசாரணை

பல கோணத்தில் விசாரணை

அண்மையில் நடந்த எண்ணெய் கப்பல்கள் தாக்குதல், மற்றும் அமெரிக்கா ட்ரோன் வீழ்ச்சி உள்ளிட்ட நடத்தப்பட்ட பின்னரும் ஐ.நா கூட்டத்தில், தற்போதைய பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதோடு இந்த தாக்குதல்கள் பல கோணத்தில் முன் வைத்தது அமெரிக்கா. இது குறித்து பல கோணத்தில் கருத்துகளை முன்வைக்கிறது அமெரிக்கா.

புதிய பொருளாதார தடையே அறிகுறி

புதிய பொருளாதார தடையே அறிகுறி

அமெரிக்கா, ஈரான் மீதுள்ள விரோதத்தினாலேயே இப்படி ஒரு புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. ஆமாங்க.. இது விரோதத்தின் மற்றொரு அறிகுறி என்றே கூறியுள்ளார் ரவாஞ்சி. இப்படி இருக்கும் பட்சத்தில், சமாதானத்தை எதிர்பார்க்கும் ஒருத்தர் ஏன் இப்படியொரு பொருளாதார தடையை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஈரான் புரிந்து கொள்ள வேண்டும்

ஈரான் புரிந்து கொள்ள வேண்டும்

கடந்த மே 12 மற்றும் 13ம் தேதி நடந்த தாக்குதலும், ஜூன் 20ம் தேதியன்று நடந்த தாக்குதலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அமெரிக்கா தூதராக செயல்படும் ஜொனாதன் கோஹன் கூறியுள்ளராம். அதிலும் குறிப்பாக ஜூன் 20ம் தேதியன்று நடைபெற்ற தாக்குதலால் 100 மில்லியன் டாலர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளாராம்.

அமெரிக்காவை குற்றம் சாட்டுகிறார்?

அமெரிக்காவை குற்றம் சாட்டுகிறார்?

டிரம்ப் நிர்வாகத்துடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் கிடையாது. பேச முடியாது என்று நிராகரித்தார் ரவாஞ்சி. அதோடு ஈரானை அச்சுறுத்தும் உங்களோடு பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்றும் குற்றம் சாட்டுகிறார். அதோடு ஈரானின் பொருளாதாரத்தை அமெரிக்கா சீர்குலைக்க நினைக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார் என்று அமெரிக்கா தூதராக செயல்படும் கோஹன் கூறியுள்ளார்.

எப்படி பேசுவது?

எப்படி பேசுவது?

ஒரு புறம் பேச்சு வார்த்தை அழைக்கும் அமெரிக்கா, தொண்டைக்கு எதிரே கத்தியை வைத்துக்கு கொண்டு பேச சொன்னால் எப்படி பேச முடியும். அதோடு நீங்கள் எப்போதும் மிக மோசமான பொருளாதார தடைகளை விதித்தால் எப்படி பேசுவது? என்ன பேசுவது என்றும் ஈரானிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறதாம்.

விலை மாற்றம் இருக்குமா?

விலை மாற்றம் இருக்குமா?

ஒரு புறம் இந்த இரு நாடுகளின் பிரச்சனையால் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒபெக் நாடுகள் கூட்டத்தில் உற்பத்தி குறைக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு புறம் ஈரானில் உற்பத்தியை சரிகட்டவும், இரு நாடுகளிடையே இருந்து வரும் பிரச்சனையால் அண்டைய நாடுகள் பாதிக்க கூடாது என்பதற்காகவும், கச்சா எண்ணெய் விலை அதிக ஏற்றம் இறக்கம் இல்லாமல் வர்த்தகமாகியும் வருவது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+