போரை முடிவுக்கு கொண்டு வர தயார் ஆனா ஒரு கண்டிஷன்: திடீரென மனம் மாறிய ஈரான்..!!

ஈரான் போரில் திடீர் திருப்பமாக போரை முடிவுக்கு கொண்டு வர தயார் என ஈரான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்காக சில நிபந்தனைகளை ஈரான் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் ஈரானில் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இந்தியா உட்பட பல நாடுகளிலும் கடுமையான கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை இயக்குவது குறித்து ஈரானும் ஓமனும் ஒரு உடன்படிக்கையை எட்டியுள்ளன. இதன்படி சில பகுதிகள் ஓமன் நீர்ச்சந்தியிலும், சில பகுதிகள் ஈரான் நீர்ச்சந்தியிலும் அமையும் வகையில் ஒரு கப்பல் போக்குவரத்து பாதை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போரை முடிவுக்கு கொண்டு வர தயார் ஆனா ஒரு கண்டிஷன்: திடீரென மனம் மாறிய ஈரான்..!!

அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, கப்பல்கள் இந்த ஜலசந்தியின் நடுவில் உள்ள பிரத்யேக பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படும் என ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளரான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார். ஓமனுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும் கூட, அமெரிக்காவின் நிலைப்பாடு மாறாமல் ஜலசந்தியை முழுமையாக திறக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக கூறுகிறது.

Also Read

இதற்கு ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள முற்றுகையை உடனடியாக விலக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள ஈரான், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். முடக்கப்பட்ட ஈரானின் வெளிநாட்டு சொத்துகளை விடுவிக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என ஈரான் கூறியுள்ளது. ஆனால் ஈரானின் இந்த நிபந்தனைகளை அமெரிக்கா எப்படி எதிர்வினையாற்றும் என்பது தெரியவில்லை. பிப்ரவரி 28இல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடங்கின. இந்த போரில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.இதனை அடுத்து இரு தரப்பும் மிக தீவிரமாக போர் நடத்தின.போர் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது.

Recommended For You

இதனால் கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டு, பல நாடுகளிலும் பெட்ரோல்ம் டீசல், எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. இநிலையில் முதலில் அமெரிக்கா ஈரான் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அது சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்துகின்றன. கன்னித்தீவு கதையாக ஈரான் போர் தொடர்கிறது. இரு தரப்பும் விட்டு கொடுக்க தயாராக இல்லை. எனவே அனைத்து அமைதி பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+