தீ பற்றி எரியும் எண்ணெய் கிணறு.. பஹ்ரைன் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய ஈரான்.. பீதியில் மக்கள்!

அமெரிக்கா கடந்த 6 நாட்களாக திட்டமிட்டு ஈரான் நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் வேளையில் ஈரான், அமெரிக்கா ராணுவ தளங்களுக்கும் வளைகுடா நாடுகளில் மீதும், அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும் என மொத்த பிராந்தியத்தின் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்கள் மீது டார்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன் முதல் கட்டமாக இன்று காலையில் சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் நாட்டை இணைக்கும் முக்கிய பாலம் மீது தாக்குதல் நடத்தியது ஈரான், இதை தொடர்ந்து தற்போது பஹ்ரைன் நாட்டில் இருக்கும் BAPCO oil refinery மீது டிரோன் மற்றும் ஏவுகணைகளை அடித்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீ பற்றி எரியும் எண்ணெய் கிணறு.. பஹ்ரைன் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய ஈரான்.. பீதியில் மக்கள்!

மேலும் BAPCO oil refinery இத்தாக்குதலில் பாதிப்பைடைந்து தீ பற்றி ஏரியும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமுக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஈரானின் இன்றைய தாக்குதல் தொடர்ந்து ஒட்டுமொத்த வளைகுடா நாட்டு மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் ஈரான் கொடுத்த எச்சரிக்கை தான், அமெரிக்க தொடர்ந்து எங்களுடைய உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தினால் ஒட்டுமொத்த வளைகுடா பகுதிகளையும் டார்கெட் செய்து தாக்குவோம் என தெரிவித்தது.

Also Read

இதேபோல் BAPCO oil refinery மீதான தாக்குதல் குறித்து இதுவரையில் பஹ்ரைன் அரசும், அமெரிக்காவும் எவ்விதமான விளக்கமும் கொடுக்கவில்லை. மேலும் இந்த BAPCO சுத்திகரிப்பு ஆலை மனாமா பகுதிக்கு அருகில் இருக்கும் சிட்ரா தீவில் உள்ளது.

தீ பற்றி எரியும் எண்ணெய் கிணறு.. பஹ்ரைன் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய ஈரான்.. பீதியில் மக்கள்!

இன்று காலை முதல் ஈரான் பஹ்ரைனில் இருக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள், சொத்துக்கள் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.

ஏன் பஹ்ரைன்..?

ஈரான் இந்த நாட்டை குறிவைக்க முக்கிய காரணம் இங்கு தான் அமெரிக்காவின் 5வது கடற்படை உள்ளது, ஈரான் தாக்குதலுக்கு பின்பு சைரன் ஒலிக்கவிட்டது மட்டும் அல்லாமல் பல ஏவுகணைகளை வான்பறப்பிலேயே எதிர்தாக்குதல் நடத்தி தகர்க்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+