அமெரிக்கா தொடர்ந்து 6வது நாளாக ஈரான் மீதும், ஈரான் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் நாட்டில் முக்கிய பாலம், மின்சார கட்டமைப்பு, ரயில் நிலையம் உட்பட அனைத்தும் தரைமட்டமாக்கியுள்ளது அமெரிக்க ராணுவம்.
இந்த நிலையில் ஈரான் இன்று தொடுத்த ராணுவ தாக்குதலில் வளைகுடா நாடுகள் பெரும் பதற்றத்தில் மூழ்கியுள்ளது. இன்று காலையில் ஈரான் நாட்டிந் IRGC படைகள் கத்தார் நாட்டில் மாபெரும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 3-4 ஏவுகணைகள் கத்தார் தலைநகர் தோகாவில் தாக்குதலுக்கு உள்ளானது.

இதில் பெரும் பாதிப்பு தோகவாவில் இருக்கும் அமெரிக்காவின் அல் உதைத் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஈரான் இன்று காலையில் பஹ்ரைன், ஜோர்டன், குவைத், ஈராக் நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்பு, தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் முக்கியமாக சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் நாட்டை இணைக்கும் 25 கிலோமீட்டர் தொலைவிலான King Fahd Causeway மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது, இந்த தாக்குதலில் நடந்த பாதிப்பை சரி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சைரன் சத்தத்துடன் விரைந்தது.
ஈரான் தாக்குதலுக்கு முன்பு அமெரிக்கா, ஈரான் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது பெரும் தாக்குதலை நடத்தியது, இதில் 3 முக்கிய பாலங்களை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஈரான் நாட்டில் பந்தர் அப்பாஸ் மற்றும் லார் என்ற முக்கிய நகரங்களை இணைக்கும் பந்தர் காமிர் மேம்பாலம், கரிவே பாலம் மற்றும் ஹொர்மொஸ்கான் மாகாணத்தில் உள்ள பாலம் ஆகியவற்றை அமெரிக்கா தாக்கியுள்ளது.
இதேபோல் ஈரான் முக்கிய துறைமுகமான Shahid Rajaei-ஐ இணைக்கும் ரயில் நெட்வொர்கின் முணையமாக செயல்படும் பந்தர் அப்பாஸ் மேற்கு ரயில் நிலையம் அமெரிக்க ராணுவத்தால் தாக்கப்பட்டது. இதோடு டெலிகாம் டவர், Iranshahr விமான நிலையம் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து ஈரான் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை டார்கெட் செய்து அழித்து வரும் வேளையில் ஈரான் முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் எச்சரிக்கையில் அமெரிக்கா தனது தாக்குதலை தொடர்ந்தால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளில் அனைத்து உள்கட்டமைப்புகளையும் அழித்து விடுவோம், மீண்டும் எல்லோருக்கும் ஒட்டகத்தை செருப்பு கால்கள் உடன் மேய்க்கும் நிலை வரும் என மிரட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications