ஈரான் அணுசக்தி உடன்பாட்டில் அமெரிக்கா மீண்டும் சேர்வது குறித்த சந்திப்பு இன்றி இணையம் வழியாக சந்திப்பு நடக்கவிருக்கிறது.
ஏற்கனவே இந்த ஒப்பந்தத்தில் உள்ள சீனா, ஈரான், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவிருகின்றன.
இதற்கிடையில் இந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, இந்த சந்திப்பினை வரவேற்பதாக கூறியுள்ளது. அதோடு இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் சேரலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்போது தான் தெரிய வரும்.
ஈரான் மீது பொருளாதார தடை
ஈரான் அனுமதி இல்லாமல் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக, யுனைடெட் நேஷனஸ் செக்யூரிட்டி கவுன்சில் அமைப்பில் இருக்கும நாடுகளாக அமெரிக்கா பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. இதன் பிறகு ஈரான், நேஷனஸ் செக்யூரிட்டி கவுன்சில் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்
இதன் பிறகு கடுமையான விதிமுறைகள், கட்டுப்பாடுகளுடன் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இது ஈரான் அணு ஒப்பந்தம் என்றும் கூறப்பட்டது. இதில் அணுசக்தி பொருட்களை ஈரான் அதிகளவில் பயன்படுத்த கூடாது என கட்டுப்பாடுகள் விதிகப்பட்டது. இதன் பிறகு ஈரான் கச்சா எண்ணெய் வணிகத்தினை மேம்படுத்த துவங்கியது.
அமெரிக்கா வெளியேற்றம்
எனினும் கடந்த 2015ம் ஆண்டில் ஈரான் மற்றும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட, இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தது. இந்த ஓப்பந்தமானது ஒபாமா ஆட்சியில் இருந்தது போது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து முந்தைய ஜனாதிபதி டிரம்ப் ஈரான் மீது, பொருளாதார தடைகளை விதித்தார்.
பேச்சு வார்த்தைகள் துவக்கம்
அதோடு ஈரானிடன் யாரும் எண்ணெய் உள்ளிட்ட வணிகங்களை செய்யக் கூடாது. அப்படி மீறி செய்தால் அந்த நாட்டின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என கூறினார். இதனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை தவிர்த்தன. இந்த நிலையில் ஈரான் பொருளாதாரத்தில் மிக பின்னடைவை சந்தித்தது. ஆனால் தற்போது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் வந்த பிறகு மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தைகள் தற்போது தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications