இன்றைய இணைய உலகில் எது எப்போது டிரெண்டாகும் என்று யாராலும் கணிக்க முடியாது. கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளங்களில் #TrumpDead மற்றும் #TrumpHospitalized போன்ற ஹேஷ்டேக்குகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பகிரப்படும் செய்திகள் உலகெங்கும் உள்ள அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த செய்திகள் உண்மையா அல்லது வெறும் வதந்தியா? எதனால் திடீரென இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டானது? வெள்ளை மாளிகை வட்டாரங்கள் சொல்வது என்ன? குழப்பமான தகவல்களுக்கு மத்தியில் இருக்கும் தெளிவான உண்மை என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

ஏப்ரல் பூல் முடிஞ்சும் நம்ம பசங்க விடமாட்டாங்க போலவே. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை முடிச்சு விட்ட கையோடு, வதந்தி பார்ட்டிகள் தற்போது டிரம்பின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செத்துட்டாரா. மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார் போன்ற செய்திகள், ஹேஸ்டேக்குகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மத்திய கிழக்கு பகுதிகளில் ஒரு பக்கம் போர் பிரச்சனை அனல் பறக்க, மறுபுறம் நெட்டிசன்களின் அலப்பறைகள் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் உண்மையில் டிரம்புக்கு என்ன தான் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எல்லாம் ஒரு வீடியோவால் வந்த வினை தான். டிரம்ப் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் இருந்து வெளியேறுவது போன்ற ஒரு பழைய வீடியோவை, யாரோ ஒருவர் தட்டிவிட, அதை பார்த்த நெட்டிசன்கள், ஆஹா மனுஷன் அட்மிட் ஆகியிருக்காரோ என விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். அது அப்படியே டிரம்ப் செத்து போயிட்டாரு எனும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து விட்டது.
எக்ஸ் பயனர் ஒருவர் வால்டர் ரீட் மருத்துவமனை பக்கத்துல ரோடெல்லாம் மூடிட்டாங்க, ஒயிட் ஹவுஸ்ல இன்னைக்கு பிரசிடென்ட் வெளியே வரமாட்டார்னு சொல்லிட்டாங்க, ஏதோ விபரீதம் நடக்குது என ஒரு போஸ்ட் போட, பதற்றம் மேலும் தொற்றிக் கொண்டுள்ளது.
எலோன் மஸ்க்கின் AI-ஆன Grok-இடம் கேட்டதற்கு, அது சொன்ன பதில், இதெல்லாம் பொய். ஏப்ரல் 4 அன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கே, வெள்ளை மாளிகையிலிருந்து பிரஸ் லிட் அறிவிக்கப்பட்டது. அதாவது அதிபர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்க மாட்டார், அவருக்கு வேலை இருக்கு என்று அர்த்தம். இது வழக்கமாக செயலில் உள்ள நடைமுறைதான். ஆனால் வதந்தியாளர்கள் அதை அவசர நிலை என தவறாகவும் சித்தரித்து விட்டனர்.
மேலும் வழக்கமாக டிரம்ப் ஈஸ்டர் விடுமுறைக்கு மார்-ஏ-லாகோ எஸ்டேட்டுக்கு செல்வார். ஆனால் இந்த முறை ஈஸ்டர் பண்டிகையை ஒயிட் ஹவுஸிலேயே கொண்டாட டிரம்ப் பிளான் பண்ணியிருக்கார். அவர் ஓவல் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்த்துவிட்டு, ஜாலியாக குடும்பத்துடன் ஈஸ்டர் டின்னர் சாப்பிட்டு கொண்டாட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் வால்டர் ரீட் மருத்துவமனை பக்கம் எந்த ரோடும் மூடப்படவில்லை, எந்த விமான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அது முற்றிலும் தவறான தகவல் என்றும். இது ஏதோ பழைய வீடியோ செய்த வேலையாக இருக்கலாம். டிரம்ப் ஆரோக்கியமாகவும், தெம்பாகவும் தான் இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வதந்திகளை பார்த்தால், நான் இன்னும் சாகலடா கைப்புள்ள என அவர் வடிவேலு பாணியில் சொல்வது போலத்தான் இருக்கிறது. இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக டிரம்பே முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தான் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், ஈரான் மலைப்பகுதிகளில் சிக்கியிருந்த அமெரிக்க ராணுவ அதிகாரியை மீட்டெடுத்த ரகசியங்களையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
More From GoodReturns

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications


