ஏதென்ஸ்: பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் கிரீஸ் நாட்டிற்கு உதவி செய்யப் பீரான்ஸ் தாயாராகத் தான் உள்ளது, ஐரோப்பிய கூட்டணியில் இருந்து கிரீஸ் வெளியேறுவது தாங்கள் விரும்பவில்லை எனப் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் கிரீஸ் நாட்டு ஐரோப்பிய நாடுகளில் ஒரு கூட்டம் ஆதரித்தாலும், மற்றொரு கூட்டம் (வளர்ந்த நாடுகள்) உதவிக்கரம் நீட்ட மறுக்கிறது.
ஜெர்மினி நிலைப்பாடு என்ன??
ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி ஞாயிற்றிக்கிழமை நடக்க இருக்கும் வாக்கெடுப்பின் முடிவுகள் பின்னர் நிதியுதவி குறித்த முடிவுகள் தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
பிரான்ஸ் ஏன் உதவி செய்ய வேண்டும்..
கிரீஸ் நாட்டைப் போலவே ஐரோப்பிய சந்தையில் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற சில நாடுகளும் அதிகளவில் கடன் பெற்று பொருளாதார வளர்ச்சியில் மந்தமடைந்துள்ளது. கிரீஸ் வெளியேறினால் தனக்கும் அதேபோன்ற நிலை ஏற்படும் என இந்நாட்டுகள் கணித்துள்ளது.
இதன் காரணமாகவே பிரான்ஸ் தற்போது உதவி செய்ய முன்வந்துள்ளது.
இரண்டாகப் பிரிக்கப்படும் ஐரோப்பா
கிரீஸ் நாட்டின் முடிவுகளுக்குப் பிறகு ஐரோப்பா 2 பகுதியாகப் பிரியவும் வாய்ப்புண்டு எனப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் படி கிரீஸ், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்றவை தனி நாணயங்கள் உடையத் தனி நாடாகப் பிரியும்.
வங்கி மற்றும் நிதிசேவை முடக்கம்
கடந்த திங்கட்கிழமை முதல் கிரீஸ் நாட்டில் வங்கிகள் முடங்கப்பட்டு உள்ளதால், ஒய்வுதியதாரர்கள் மற்றும் மக்கள் தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க ஏடிஎம் இயந்திரங்கள் முன் வரிசைகட்டி நிற்கின்றனர்.
சில இடங்களில் போராட்டங்கள் மற்றும் காவல்துறை - மக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுள்ளது.
நிதி நிலை பாதுகாப்பு
கிரீஸ் நாட்டின் நிதிநிலையைக் காக்கவே வங்கிகள், நிதி சேவை, பங்குச் சந்தை, இணையதள நிதி பரிமாற்றம் ஆகிய அனைத்திலும் அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அலெக்சிஸ் சிப்ரஸ்
இந்நிலையில் சர்வதேச நிதியுதவியாளர்களின் பிணை தொகைக்கான திட்டத்தை மறுக்கும் படி கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வரி மற்றும் ஒய்வுதியம்
இப்பிணை தொகைக்கான திட்டம் ஒப்புதல் பெற்றால் கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவி கிடைக்கும் ஆனால் மக்கள் மீது அதிகளவிலான வரி மற்றும் ஒய்வுதிய குறைப்பு போன்ற நடவடிக்கைகள் தொடரும்.
பிரான்கோசிஸ் ஹாலண்ட்
இதுகுறித்துப் பிரான்ஸ் அதிபர் பிரான்கோசிஸ் ஹாலண்ட் கூறுகையில், பிணை தொகைக்கான திட்டம் மக்களை அதிகளவில் பாதிக்காமல் சில குறிப்பிட்ட மாறுதல்களைச் செய்து கிரீஸ் நாட்டை ஐரோப்பிய கூட்டணிக்குள் வைத்துக்கொள்வது எங்களது கடமை என அவர் தெரிவித்தார்.
ஏஞ்சலா மெர்கல்
நிதியுதவி குறித்த திட்டங்களின் பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள வாக்கெடுப்பிற்குப் பின்னரே நடைபெறும் என ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்தார்.
உண்மை கசக்கும் ஆனாலும் சுவாரஸ்யம்..
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications