விரைவில் அணு ஆயுதப் போர் வரப்போகிறதா? சத்தமில்லாமல் காய் நகர்த்தும் டிரம்ப் மற்றும் புதின்!!

உலக அளவில் சக்தி வாய்ந்த நாடு என்பது அந்த நாட்டின் ராணுவ பலத்தை கொண்டு தான் தீர்மானிக்கப்படுகிறது. ராணுவ பலம் என்றால் எத்தனை ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் என அர்த்தம் கிடையாது ,அதிநவீன ஆயுதங்கள் எவ்வளவு இருக்கின்றன குறிப்பாக அணு ஆயுதங்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதை பொறுத்து தான் ஒரு நாட்டின் பலம் என்பது நிரூபிக்கப்படுகிறது.

அதிக ஆயுதம் கொண்ட நாடுகளின் கை சர்வதேச அரங்கில் சற்றே ஓங்கி இருக்கும். இந்த ஆயுதப் போட்டியில் எப்பொழுதுமே ரஷ்யாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது உண்டு. தற்போது புதிதாக அணு ஆயுதப் போட்டி இரு நாடுகளுக்கும் இடையே உண்டாகி இருக்கிறது. ரஷ்யா அண்மையில் தான் இரண்டு அதிநவீன அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்திருக்கிறது.

விரைவில் அணு ஆயுதப் போர் வரப்போகிறதா? சத்தமில்லாமல் காய் நகர்த்தும் டிரம்ப் மற்றும் புதின்!!

ரஷ்யா அரசு வானில் சென்று தாக்குதல் நடத்தும் ஒரு அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணையையும், நீருக்கடியில் சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு டிரோனையும் வெற்றிகரமாக பரிசோதனை செய்திருக்கிறது. ரஷ்ய அதிபர் புதினும் இதுபோன்ற சக்தி வாய்ந்த ஏவுகணை உலகில் எந்த நாட்டிலும் இல்லை என பெருமிதம் தெரிவித்தார் .

இந்த சூழலில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள போகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். எனவே இரு நாடுகளும் பனிப்போர் காலத்தில் காணப்பட்டதைப் போன்ற ஒரு ஆயுதப் போட்டியில் இறங்கி இருக்கின்றனவா என்ற அச்சம் உலகம் முழுவதும் தற்போது எழுந்திருக்கிறது .

ரஷ்யா Poseidon என்ற நீருக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அணு ஆயுத திறன் கொண்ட ட்ரோனை முதலில் பரிசோதனை செய்தது. இது எதிரி நாட்டின் கடற்கரையில் ரேடியோ ஆக்டிவ் சுனாமிகளை ஏற்படுத்தக்கூடிய திறன் கொண்டது என ரஷ்ய அரசு கூறுகிறது. இதை எந்த ஒரு நாட்டின் ஆயுதத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என கூறும் புதின் நேட்டோ மற்றும் அமெரிக்காவிடம் கூட இத்தகைய திறன் வாய்ந்த ஒரு அணு ஆயுதம் இல்லை என பெருமிதமாக தெரிவித்தார் .

அடுத்ததாக Burevestnik என்ற மற்றொரு அணு ஆயுத திறன் கொண்ட ஒரு ஏவுகணையும் ரஷ்யா பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இந்த அணு ஆயுதம் கொண்ட ஏவுகணை வானில் சுமார் 15 மணி நேரம் பறந்து 14,000 கிலோ மீட்டர் சென்றதாகவும் பல்வேறு துல்லியமான இலக்குகளை எல்லாம் நெருங்கியதாகவும் ரஷ்யா கூறுகிறது.

விரைவில் அணு ஆயுதப் போர் வரப்போகிறதா? சத்தமில்லாமல் காய் நகர்த்தும் டிரம்ப் மற்றும் புதின்!!

தங்களின் ராணுவ பலத்தை நிரூபிப்பதற்காகவே ரஷ்யா இப்படி அணு ஆயுத சோதனைகளை நடத்தி இருக்கிறது. இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு நான் ஒரு உத்தரவு பிறப்பித்து இருக்கிறேன் என கூறியிருக்கிறார். அதாவது மற்ற நாடுகள் தங்களின் ஆயுதங்களை பரிசோதனை செய்து வருகின்றன எனவே நான் அதற்கு நிகராக பெண்டகனும் தங்கள் வசம் இருக்கக்கூடிய அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்க்கும்படி உத்தரவு பிறப்பித்திருக்கிறேன் இந்த நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும் எனக் கூறியிருக்கிறார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அரசாங்கம் அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்க்கும்படி ராணுவ தலைமையகத்திற்கு வெளிப்படையாக உத்தரவிட்டிருக்கிறது. இறுதியாக 1992 ஆம் ஆண்டு தான் அமெரிக்கா தன்னுடைய கடைசி அணு ஆயுத சோதனையை நிகழ்த்தியது .1990களின் மத்தியில் ரஷ்யாவின் சீனாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை . ஆனால் தற்போது இந்த அணு ஆயுதப் போட்டியை ரஷ்யா தொடங்கி வைத்திருக்கிறது . இதற்கு மத்தியில் சீனாவு தங்களுடைய ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகிறது . ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் இந்த அணு ஆயுத சோதனை சீனாவையும் அடுத்த இந்த அணு ஆயுத போட்டியில் குதிக்க வைக்கும் என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+