வீட்டுக்குள்ளேயே விபரீதமா என்ன, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக எடுக்கப்போகும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது உலகத்துக்கே ஒரு மர்மம். ஆனால் அந்த ரகசியத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சில கருப்பு ஆடுகள் வெள்ளை மாளிகைக்குள்ளேயே இருந்து கொண்டு, அதை வைத்து கோடிக்கணக்கில் பந்தயம் கட்டி காசு பார்த்துள்ளதாக எழுந்துள்ள புகார் அமெரிக்காவையே அதிர வைத்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என டிரம்ப் அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, எண்ணெய் சந்தையில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெள்ளை மாளிகை நிர்வாகம், உள்ளூர் ரகசியத்தை வெளியே விற்று காசு பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர்களுக்கு மெயில் அனுப்பி எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் டீமிற்கு உள்ளே நடக்கும் இந்த உள்ளடி அரசியலை கண்கானித்தாதாரா? இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மிக முக்கியமான போர் மற்றும் பொருளாதார அறிவிப்புகள் வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, சந்தையில் பல கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ட்டர்ஸ் மற்றும் ப்ளூம்பெர்க் செய்திகளின் படி, வெள்ளை மாளிகை தனது ஊழியர்களுக்கு ஒரு ரகசிய மெயிலை (Internal Email) அனுப்பியுள்ளது. அதில் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பொது வெளியில் வராத ரகசிய தகவல்களை வைத்து நிதி சந்தையிலோ (Futures Market) அல்லது பெட்டிங் தளங்களிலோ பந்தயம் கட்டக் கூடாது என ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 23 அன்று காலை 7:05 மணிக்கு டிரம்ப் ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக பதிவிட்டார். ஆனால், அந்த பதிவு வருவதற்கு சரியாக 15 நிமிடங்களுக்கு முன்பே, அதாவது 6:49 மணிக்கே சுமார் 580 மில்லியன் டாலர் (சுமார் 4,800 கோடி ரூபாய் ) மதிப்புள்ள கச்சா எண்ணெய் ஒப்பந்தங்கள் விற்கப்பட்டுள்ளன. இது ரகசிய தகவல்கள் வெள்ளை மாளிகைக்குள்ளேயே கசிந்துள்ளதை காட்டுகிறது.
டிரம்ப் தனது முக்கிய முடிவுகளை, குறிப்பாக ஈரான் மற்றும் வெனிசுலா விவகாரங்களில் அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, சந்தையில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடந்துள்ளது. இது ரகசிய தகவல்கள் கசிந்துள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த சூழலில் தான் டிரம்ப் அலுவலகத்தில் எச்சரிக்கை மெயில்கள் பறந்துள்ளன.
குறிப்பாக கடந்த மார்ச் 23 அன்று காலை 7:05 மணிக்கு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் ஈரானுடனான பேச்சுவார்த்தை குறித்து பதிவிட்டார். ஆனால் அந்த பதிவு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே, அதாவது 6:49 மணி முதல் 6:50 மணிக்குள், சுமார் 580 மில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய் ஒப்பந்தங்கள் கைமாறின. வழக்கமாக 700 ஒப்பந்தங்கள் மட்டுமே நடக்கும் அந்த நேரத்தில், அன்று 6,200 ஒப்பந்தங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப்பின் பதிவுக்கு பின் கச்சா எண்ணெய் விலை 15% சரிந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா அதிபர் மதுரோ பிடிபடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பாலிமார்க்கெட் பயனர் ஒருவர் அதை சரியாக கணித்து 400,000 டாலர் லாபம் பார்த்தார். அதேபோன்று பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்பதை முன்கூட்டியே பந்தயம் கட்டி மற்றொரு நபர் 500,000 லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டேவிஸ் இங்கிள் கூறுகையில், அதிபர் டிரம்ப் பங்குச்சந்தை அனைவருக்கும் லாபகரமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார். ஆனால், அரசு அதிகாரிகள் பொதுவெளியில் இல்லாத ரகசிய தகவல்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது தடை செய்யப்பட வேண்டும். அமெரிக்க மக்களின் நலனே டிரம்பிற்கு முக்கியம் என தெரிவித்தார். இருப்பினும் அரசு ஊழியர்கள் ரகசிய தகவல்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும், தற்போது எழுந்துள்ள புகார்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
More From GoodReturns

அமெரிக்க தலைநகரை ஆளப்போகும் தமிழ் பெண்..!! தேனி டூ வாஷிங்டன்..!! யார் இந்த ரினி சம்பத்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications

