ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் : ஊழியர்களை வெளியேற்றும் அமெரிக்கா..

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. குறிப்பாக ஈரானின் அணு ஆயுதங்கள் இருக்கும் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவு துறை எச்சரிக்கை வெளியாகி போர்பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

ஊழியர்களை வெளியேற்றும் அமெரிக்கா: இந்த சூழலில் அமெரிக்க அரசு மேற்கொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையும் இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் தங்களுடைய ஊழியர்களை வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அத்தியாவசிய தேவைகள் அல்லாத பணிகளில் இருக்கக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா படிப்படியாக குறைத்து வருகிறது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் : ஊழியர்களை வெளியேற்றும் அமெரிக்கா..

ஈரான் - இஸ்ரேல் மோதல்: பாக்தாத், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்த தங்களுடைய ராஜாங்க ரீதியிலான அதிகாரிகள் மற்றும் ராணுவ தளங்களில் வேலை செய்து வந்து அதிகாரிகளை அமெரிக்கா அங்கிருந்து வெளியேற்றி வருவதாக சொல்லப்படுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் காரணமாக அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமே இதற்கு காரணம். பாக்தாத் அமெரிக்க தூதரகத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடாத ஊழியர்கள் வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் புதன்கிழமை அன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதிகரிக்கும் பதற்றம்: ஏற்கனவே குறைவான ஊழியர்களை கொண்டு தான் இந்த தூதரகம் இயங்கிவது தற்போது அந்த ஊழியர்களும் வெளியேற்றப்படுவது தான் அங்கே பதற்றத்தை அதிகரித்துள்ளது. அதேபோல பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய பகுதிகளில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

ஆபத்தான இடம் என டிரம்ப் பேட்டி: முன்னதாக புதன்கிழமை அன்று பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் ஏனெனில் அது ஆபத்தான பகுதியாக மாறி வருகிறது என தெரிவித்தார். அடுத்த என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அவர் கூறி இருந்தார். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து நீண்ட காலமாகவே அமெரிக்கா தன்னுடைய கவலைகளை வெளியிட்டு வருகிறது.

அணுசக்தி திட்டங்கள்: ஈரான் அணுசக்தி திட்டங்களின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதும், அந்த நாடு அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் பல காலமாக இருக்கிறது. இதற்காகவே அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் ஓமனில் நடைபெறுவதாக இருந்த நிலையில் ஈரான் இஸ்ரேல் இடையிலான பதற்றம் காரணமாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரானை சாடும் டிரம்ப்: முன்னதாக பேட்டி ஒன்றில் இது பற்றி பேசிய டிரம்ப், ஈரானுடன் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுவது குறித்து தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் வேண்டுமென்றே இந்த பேச்சு வார்த்தையை தாமதப்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். ஈரான் நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் அளித்த பேட்டியில் ஈரான் அணு ஆயுதத்தை மேம்படுத்தவில்லை ,அமெரிக்கா ராணுவமே இந்த பிராந்தியத்தில் ஒரு அமைதியின்மையை ஏற்படுத்துகிறது என தெரிவித்திருக்கிறார்.

போரை திணித்தால் எதிர்வினை: எங்கள் மீது போரை திணித்தால் எங்களை விட எதிரி நாட்டில் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படும் என்பதை நாங்கள் கூறுகிறோம், எங்களுக்கு அருகில் இருக்கும் அனைத்து அமெரிக்க தளங்களையும் நாங்கள் அழிப்போம் என கூறி இருக்கிறார். ஈரானின் நீண்ட கால எதிரியாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இருக்கின்றன. இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியாக அமெரிக்கா இருப்பதால் இஸ்ரேல் ஈரான் இடையிலான மோதல் அமெரிக்காவுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும்.

முன்னதாக பிரிட்டன் அரசு பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹார்மோஸ் ஜல சந்தி ஆகிய பகுதிகளில் இருக்கும் கப்பல்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+