ஈரான் உடன் அமெரிக்கா அணுஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் எவ்விதமான தீர்வும் எட்டப்படாத நிலையில் தற்போது ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை துவங்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்காவின் உதவியுடன் ஈரானுக்கு எதிராக சனிக்கிழமை முன்கூட்டிய தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரான் தாக்குதல் நடத்துமோ என்ற சந்தேகத்தில் அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் இஸ்ரேல் திடீர் தாக்குதலை துவங்கியுள்ளது. இந்த தாக்குதல் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் போர் அச்சம் அதிகரித்துள்ளது.

ஈரான் - மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நடந்து வரும் அணு ஆயுத பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் நம்பிக்கை இந்த தாக்குதல் மூலம் குறைந்துள்ளது. முதல் தாக்குதல் ஈரான் தலைவர் அயதொல்லா அலி கமேனியின் அலுவலகங்கள் அருகே நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஊடகங்கள் நாடு முழுவதும் தாக்குதல்கள் நடந்ததாக கூறுகின்றன.
கமேனி தற்போது ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இல்லை என்றும் அவர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், இந்த நடவடிக்கை பல மாதங்களாக திட்டமிடப்பட்டது, தாக்குதல் தேதி வாரங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.
ஏர்ஸ்பேஸ் மூடல், பங்குச் சந்தை மூடல், பள்ளிகள் விடுமுறை
இரு நாடுகளும் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. ஈரானில் தெஹ்ரான் பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது என்று ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்நாட்டில் மொபைல் போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் இஸ்ரேல் விமான நிலைய ஆணையம், போக்குவரத்து அமைச்சர் உத்தரவின் பேரில் பயணிகள் விமானங்களுக்கு வான்வெளி மூடப்பட்டுள்ளதாக கூறியது. இஸ்ரேல் விமான நிலையங்களுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.
சைரன் சத்தம்
இஸ்ரேல் நாடு முழுவதும் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இஸ்ரேல் ராணுவம், "இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக ஈரான் ஏவுகணைகள் ஏவப்படலாம் என்று பொதுமக்களை எச்சரிக்கும் முன்கூட்டிய அறிவிப்பாக இந்த சைரன் எழுப்பப்பட்டு உள்ளது". இஸ்ரேல் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications