என்னாது ஒரு பீரின் விலை சுமார் 71 லட்சம் ரூபாயா? இது பீரின் விலையா? அல்லது பீர் பேக்டரியின் விலையா என்று கேட்கும் அளவுக்கு விலையுயர்ந்த பீர், அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த செய்தியாளரான பீட்டர் லலோர், ஆஷஸ் கிரி்க்கெட் தொடர் குறித்த செய்திகளை பதிவு செய்வதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார்.

இவர் ஒரு பீர் விரும்பியும் கூட, இவர் கிட்டதட்ட 25 வருடங்களாக இதை பற்றி எழுதியும் வருகிறாராம். இந்த நிலையிலேயே அவர் நல்ல ஒரு சுவையான தரமான பீரை அருந்துவதற்காக, அப்போது மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்று பீர் அருந்தியுள்ளார் பீட்டர்.
பீரை அருந்தி முடித்ததும் அதற்கான பில்லும் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர் அருந்திய பீரின் விலையை கண்டு அதிர்ச்சியடைந்தவர் தன் வாழ் நாள் முழுக்க பீர் அடிப்பதையே நிறுத்தும் அளவுக்கு ஒரு செய்தி இருந்துள்ளது. அப்படி என்ன செய்தி என்று கேட்கிறீர்களா? அந்த பீரின் விலை 6.75 பவுண்டு தான் வரும் என்று எதிர்பார்த்தவருக்கு, அதைவிட 10,000 மடங்கு ($99,983.64) அதிகமான தொகை கூறப்பட்டு உள்ளது.
இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 71 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு என்று தோன்றினாலும், அந்த சமயத்தில் தனது கண்ணாடியை அணிந்திராத அவர் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். இது சரியான பில் தானா? என்று, அதற்கு சிரித்துக் கொண்டே தலையாட்டிய அந்த பெண், இது சரியானது தான் என்றும் கூறியுள்ளார்.
எனினும் பீட்டருக்கு இது சரியான விஷயம் அல்ல என்று தோன்றினாலும் பில்லை செலுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். ஏனெனில் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறியதால், அரைகுறை மனதுடன் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
அதற்கடுத்து சில நாட்கள் கழித்து அவரது மனைவி அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 71 லட்சம் ரூபாய் சென்றிருப்பதை கூற, தவறை புரிந்து கொண்ட பீட்டர், பின்னர் இது குறித்து கிளப் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். தவறுதலாக பீட்டரிடம் பணம் பெறப்பட்டுள்ளதை ஓட்டல் நிர்வாகமும் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக கிளப் நிர்வாகம் மன்னிப்பு கேட்டதோடு, அவரது பணமும் விரைவில் திரும்ப கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் பணம் செலுத்தியதற்காக அவரிடம் இருந்து பரிவர்த்தனைக்கான கட்டணமாக 2,499.59 டாலர், அதாவது (1.79 லட்சம் ரூபாய்) எடுக்கப்பட்டுள்ளது. இனி அவர் வாழ்நாள் முழுக்க தனது வாழ்க்கையில் பீர் என்பதையே, இந்த கட்டணத்தினால் மறந்து விடுவார் என்றும், இணையதளத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications