பிபிஓ நிறுவனங்களை வளைத்துப்போடும் ஐடி நிறுவனங்கள்..! ஆனால் இந்தியாவில் அல்ல வெளிநாடுகளில்..!

ஐடி சேவை வழங்கி வரும் விப்ரோ மற்றும் கானிசென்ட் நிறுவனங்கள் பிபிஓ சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஐடி கன்சல்டிங் நிறுவனங்களை வாங்க முடிவு செய்துள்ளதாகச் செவ்வாய்க் கிழமை அறிவித்துள்ளன.

ஐடி நிறுவனங்களில் தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவிற்கு அதிகப்படியான ஊழியர்களை அனுப்ப முடியாத காரணங்களினால் பிபிஓ நிறுவனங்களை வாங்கி அதன் மூலம் வேலைவாய்ப்பினை அளித்துச் சிக்கலை தவிர்க முடிவு செய்துள்ளதாக நமக்குக் கிடைத்த தகவல்கள் மூலம் தெரிகின்றது.

காக்னிசென்ட்

காக்னிசென்ட்

காக்னிசென்ட் நிறுவனம் ஹெக்த் கேர் சர்வீஸ் காப்ரேஷனின் துணை நிறுவனமான டிஎம்ஜி ஹெல்த் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. ஆனால் என்ன விலை அளிக்க உள்ளது என்பது மட்டும் தெரியவில்லை.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

டிஎம்ஜி ஹெல்த் நிறுவனம் ஹெக்த் கேர் சர்வீஸ் காப்ரேஷன் நிறுவனத்திற்குப் புதிதாக ஐடி, வணிகச் செயல்முறை மற்றும் பிற சேவைகளை அளிக்கும் விதமாகப் பல வருட சேவை ஒப்பந்தத்தைப் போட்டுள்ளதாகவும் அது அந்த நிறுவனத்தின் பிற துணை நிறுவனங்களுக்குச் சேவை அளிக்கும் விதமாக உள்ளது என்றும் காக்னிசென்ட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எப்போது இந்த டீல் முடியும்

எப்போது இந்த டீல் முடியும்

டிஎம்ஜி ஹெல்த் மற்றும் காக்னிசென்ட் நிறுவனத்திற்கு இடையிலான இந்த டீல் 2017 நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முடியும் என்றும் காக்னிசென்ட் தெரிவித்துள்ளது.

டிஎம்ஜி ஹெல்த்

டிஎம்ஜி ஹெல்த்

ஹெக்த் கேர் சர்வீஸ் காப்ரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமாக டிஎம்ஜி ஹெல்த் 2008 ஆண்டு முதல் உள்ளது, இந்த நிறுவனத்தின் கிளைகள் பென்சில்வேனியா மற்றும் டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் உள்ளன.

அமெரிக்காவில் பல மருத்துவத் திட்டங்களுக்கு இந்த நிறுவனம் பிபிஓ சேவையினை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

அரசு உடனான வர்த்தகம்

அரசு உடனான வர்த்தகம்

அரசுத் துறை சார்ந்த திட்டங்கள் அதிகரித்து வருவதால் பல பெறும் மற்றும் சிறு நிறுவனங்கள் சந்தையில் நுழைந்து வருகின்றனர். நாங்கள் வளர்ச்சிக்கான ஒரு நல்ல எதிர்காலம் இருப்பதாக நம்புகின்றோம் என்று டிஎம்ஜி ஹெல்த் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சூசன் ராவ்லிங்ஸ் மோலினா தெரிவித்தார்.

விப்ரோ

விப்ரோ

இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ 5.12 கோடி ரூபாயினை டிரைவ்ஸ்டிரீம் என்ற நிர்வாகம் மற்றும் ஐடி கன்சல்டிங் நிறுவனம் மீது முதலீடு செய்ய இருப்பதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

பங்குகள்

பங்குகள்

விப்ரோ நிறுவனத்தின் இந்த முதலீட்டின் மூலம் 19,679 விருப்பமான பங்குகள் மற்றும் 27,865 பொது பங்குகளை வாங்க இருப்பதாக மும்பை பங்குச் சந்தைக்குத் தெரிவித்துள்ளது.

 டிரைவ்ஸ்டிரீம்

டிரைவ்ஸ்டிரீம்

விப்ரோ நிறுவனத்திற்குத் தற்போது டிரவ்ஸ்டிரீம் நிறுவனத்தில் 23.1 சதவீத பங்குகள் உள்ளது. 2001-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட டிரைவ்ஸ்டிரீம் நிறுவனத்தில் அமெரிக்காவில் 73 நபர்கள் பணிபுரிகின்றனர். 2016-ம் ஆண்டு 20.5 மில்லியன் டாலர்கள் வருவாயினை இந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+