30 ஆண்டுகளில் மனிதர்கள் வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை செய்வார்கள்: ஜேக் மா
சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் தளமான அலிபா நிறுவனர் ஜேக் மா செயற்கை நுண்ணறிவு(artificial intelligence) மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் எளிமையாக்கிவிடும் என்றும் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் ஜேக் மா இன்னும் கண்டுபிடிப்புகள், இயந்திரங்கள் மற்றும் உலகப்போர் எனப் பலவற்றைப் பற்றிப் பேசினார். அவற்றில் சில முக்கியமானவற்றைப் பற்றி இங்குப் பார்ப்போம்.
வாரத்தில் 4 நாள் வேலை
30 வருடத்தில் மனிதர்கள் வாரத்தில் 4 நாள் தான் வேலை செய்வார்கள் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இயந்திரம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
சீன கோடிஸ்வரர் ஜேக் மா செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசிய போது இயந்திரங்கள் மனித வேலையைச் செய்யக் கூடியவையாக இருக்கக் கூடாது என்று கூறினார்.
இயந்திரங்கள் மனிதர்கள் போன்று இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் மனிதர்களால் முடியாததைச் செய்யக் கூடியதாக இயந்திரங்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மனிதர்கள் எப்போது வெல்வார்கள்
ஜேக் மாவை பொறுத்தவரையில் மனிதர்கள் என்று இயந்திரங்களை வெல்கிறார்களோ அன்று தான் மனிதர்கள் வென்றுள்ளார்கள் என்பார்.
மூன்றாம் உலகப் போர்
அதே நேரம் தொழில்நுட்பங்களால் அதிகமான சிக்கல் வரும் என்பதனை உணர்ந்தவர். மூன்றாவது டெக்னாலஜியால் மூன்றாம் உலகப் போர் நிகழும் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications