ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சிறு, குறு நிறுவனங்கள் தான் முதுகெலும்பு, அதிலும் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு இது ரொம்ப முக்கியம்.
சிறு, குறு நிறுவனங்களை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமில்லை. இவர்களுக்குச் சரியான நிதியுதவி கிடைத்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும், நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.
ஆனால் இவர்களுக்குக் கடன் கொடுப்பது என்பது வாழ்வா, சாவா என்கிற விஷயம். இந்த முக்கியமான பிரச்சனைக்குத் தான் சீனாவில் ஒரு ஆன்லைன் வங்கி தீர்வு கண்டு உள்ளது.
அம்பானி, ஜாக் மா
இந்தியாவில் எப்படி அம்பானியோ, அதேபோல் சீனாவில் 5 மடங்கு ஜாக் மா. ஆன்லைன் வர்த்தகத்தின் சிங்கம். அலிபாபா, அலிபே எனப் பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் ஜாக் மா.
ஆன்லைன் வங்கி
4 வருடங்களுக்கு முன்பு MYbank என்ற ஒரு ஆன்லைன் வங்கியைத் துவங்கினார் ஜாக் மா. இந்த வங்கி சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டு உள்ளது.
நொடிகளில் கடன்
இந்த வங்கி முழுவதும் இணையத்தின் வாயிலாகவே இயங்கிக் கூடியவை என்பதால் ஒரு நிறுவனம் கடனுக்காக விண்ணப்பம் செய்தால் உடனடியாகவோ அல்லது ஒப்புதல் பெற்ற அடுத்தச் சில நொடிகளில் பணம் கிடைத்து விடும்.
டெக்னாலஜி
இந்த வங்கி ஒருவருக்குக் கடன் கொடுக்கும் முன் ரியல் டைம் பேமெண்ட்ஸ் டேட்டா மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சிஸ்டம் கொண்டு சுமார் 3000 காரணிகளை ஆய்வு செய்து கடனுக்கு ஒப்புதல் அளிக்கிறது.
1.6 கோடி நிறுவனங்கள்
முற்றிலும் தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வங்கியின் மூலம் இதுவரை சுமார் 1.6 கோடி சிறு குறு நிறுவனங்களுக்குச் சுமார் 290 பில்லியன் டாலர் பணத்தைக் கடனாகக் கொடுத்துள்ளார்.
ஸ்மார்ட்போன்
இதில் என்ன கொடுமை என்றால், கடன் பெறுவதற்கான மொத்த வேலையையும் ஸ்மார்ட்போன் மூலமாகவே செய்துவிடலாம் என்பது தான். எல்லா வேலைகளும் வெறும் 3 நிமிடத்திற்குள்ளேயே முடிந்துவிடும், எவ்வித வங்கி ஊழியர்களும் உள்ளீடு இல்லாமல்.
சோசியல் மீடியாவும் அடக்கம்
MYbank ஒருவருக்குக் கடன் கொடுக்கும் முன் வங்கி செயல்பாடுகள், சமுக வலைத்தளத்தில் அவரது இயக்கங்கள், மருத்துவக் கோளாறுகள் எனப் பல வகையான காரணிகளைத் தனது அதிநவீன தொழில்நுட்பத்தின் வாயிலாகச் சோதனை செய்கிறது.
ஆஸ்தான வங்கிகள்
MYbank போட்டிப்போடும் வகையில் சீனாவின் பிற தனியார் மற்றும் அரசு வங்கிகளும் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகளவிலான கடனை வாரி வழங்கி வருகிறது.
இந்த ஆன்லைன் வங்கி சேவை சிறப்பாகவும், தரமாகவும் இருக்கும் நிலையில், தற்போது சீனாவின் முன்னணி வங்கிகளும் இப்புதிய துறைக்குள் நுழைய முடிவு செய்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இதன் எதிரொலியாகத் தற்போது சீனா அமெரிக்காவுடன் நேரடியாகப் போட்டிப் போடும் அளவிற்குப் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவில் இதுபோன்ற சேவை எப்போது வரும்..? அப்படி வந்தால் மக்களுக்கு நல்லதா..? கெட்டதா..?
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications