குருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Jack Ma. கம்பீரமான தோற்றமோ, பிரமாண்ட குரலோ இல்லாத 5 அடி 3 அங்குள உயரத்துடன் சாதாரண குரல் வளம் கொண்ட 54 வயது பிசினஸ் காந்தம். அலிபாபா நிறுவனத்தை நிறுவி வெற்றி நடை போட வைத்தவர். இப்போது அலிபாபா நிறுவனத்தி செயல் தலைவராக இருக்கிறார்.

 

ஜாக் மா ஒரு ரத்த வெறி கொண்ட பிசினஸ் செங்கிஸ்கான் கிடையாது. அதே நேரம் பாவ புண்ணியம் பார்த்து பிசினஸ் வாய்ப்புகளை விடுபவரும் கிடையாது. மதில் மேல் பூனை போல ஒரு மாறுபட்ட கனவுகள் மற்றும் கொள்கைகளை உடையவர். அதனால் அவருடைய டாப் 30 பொன் மொழிகளை இங்கே பார்ப்போம்.

இங்கு பொன் மொழிகள் தமிழாக்கம் செய்வதோடு ஆங்கிலத்திலும் தருகிறோம். சில வார்த்தைகளை மொழி பெயர்க்கும் போது அதன் தன்மை மாறுபடுவதை உணர முடிகிறது. எனவே வாசகர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் ஜாக் மாவின் பொன் மொழிகளை வாசிக்கலாம்.

1

1

Never giveup. Today is hard, Tomorrow will be worse, but the day after tomorrow will be sunshine.

இன்று சிரமமாக இருக்கலாம். நாளை அதை விட கொடுமையாக இருக்கலாம். ஆனால் நாளை மறுநாள் நமக்கான சூரியன் மலரும். எனவே துவண்டு விடாதீர்கள்

 

2

2

I dont want to be liked. I want to be respected.

நான் யாராலும் விரும்பப்பட வேண்டாம். ஆனால் மதிக்கப்பட வேண்டும்.

 

3
 

3

You should learn from your competitor, but never copy. If you copy... I am pretty sure that you die.

உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் அவர்களைக் காப்பி அடிக்காதீர்கள். அப்படி காப்பி அடித்தால் உங்கள் சாவு நிச்சயம்.

 

4

4

We are never in lack of money, We lack people with dreams, who can die for those dreams

நம்மிடம் எப்போதும் பணத்துக்கு பஞ்சம் இருந்ததில்லை... ஒரு கனவை நினைவாக்க தன் உயிரையே கொடுக்கும் மனிதர்களுக்குத் தான் பஞ்சம்.

 

5

5

Once in your life, try something, work hard at something. Try to change the things. Nothing bad can happen.

உங்கள் வாழ்கையில் எதையாவது செய்ய முயங்கள். அதற்காக கடினமாக உழையுங்கள். ஒரு மாற்றாத்தைக் கொண்டு வாருங்கள். அதனால் ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை.

 

6

6

If there are many rabbits, Focus on THE rabbit which you want, not a rabbit which you may get.

ஒரு இடத்தில் நிறைய முயல்கள் இருக்கின்றன. அதில் நீங்கள் வேட்டையாட வேண்டிய முயலை மட்டும் குறிவையுங்கள். கிடைப்பதைப் பிடிக்கலாம் என குறி வைக்காதீர்கள்

 

7

7

A leader should be a visionary and have more foresight than an employee

ஒரு தலைவனுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வையும், கனவும் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு ஊழியனைப் போல எதிர்காலட் தேவைகளை மட்டும் கணிக்கக் கூடாது.

 

8

8

Forget about your competitors... JUST Focus on your customer

அட போட்டியாளன விடுங்க, நம்ம கஸ்அமர்களைக் கவனிங்க பாஸ்.

 

9

9

F you dont give up... you still have a chance.. so dont ever, ever never give up

ஒரு விஷயத்தில் இருந்து "முடியாது" என விலகாத வரை, உனக்கு அந்த விஷயம் சாத்தியப்பட வாய்ப்பிருக்கிறது. ஆக எப்போது, எந்த சூழ்நிலையிலும் முடியாது என ஒதுங்காதே.

 

10

10

When people think too highly of you, you have the responsibility to calm down and be yourself.

மற்றவர்கள் உன்னை பெரிதாக நினைக்கும் போது, நீ அமைதியாகவும், நீ நீயாகவும் இருக்கும் பொறுப்பும் வருகிறது.

 

11

11

If we are a good team and know what we want to do, one of us can defeat ten of them.

நாம் ஒரு நல்ல அணியாக இருக்கிறோம், அடுத்த என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவுடன் இருக்கிறோம் என்றால் எங்களில் ஒருவன், எங்கள் போட்டியாளர்களில் 10 பேரை தோற்கடிப்போம்.

 

12

12

Try to find the right people, not the best people.

உங்கள் வேலைக்கு சரியான நபரைக் கண்டு பிடியுங்கள், தலை சிறத நபரை அல்ல.

 

13

13

The opportunities that everyone cannot see are the real opportunities.

எல்லோராலும் பார்த்து உணர முடியாத வாய்ப்புகள் தான் உங்களின் உண்மையான வாய்ப்புகள்

 

14

14

Do not allow your colleagues and employees to work for you. Instead, let them work for a common goal.

உங்களுடன் பணி புரிபவர்களையோ, உங்கள் ஊழியர்களையோ உங்களுக்கு வேலை பார்க்க வைக்காதீர்கள். நிறுவனத்தின் பொதுவான லட்சியங்களுக்கு வேலை பார்க்க வையுங்கள்

 

15

15

A real businessman or entrepreneur has no enemies. Once he understands this, the sky's the limit.

ஒரு உண்மையான பிசினஸ் மேனுக்கோ அல்லது தொழில்முனைவோருக்கோ எதிரிகளே கிடையாது, இதை புரிந்து கொண்டால் வானமே எல்லையடா.

 

16

16

Success and profitability are outcome of focusing on customers and employees, not objectives.

வாடிக்கையாளரக்ளையும், ஊழியர்களையும் கவனித்தால் வெற்றியும், லாபமும் கிடைக்கும்.

 

17

17

Your attitude is more important than your capabilities. Similarly, your decision is more important than your capabilities.

உங்கள் பலங்களை விட உங்கள் நடத்தை மிக முக்கியம். அதே போல் உங்கள் பலங்களை விட உங்கள் முடிவுகள் ரொம்ப முக்கியம்

 

18

18

No matter how tough the chase is, you should always have the dream you saw on the first day. It'll keep you motivated and rescue you (from any weak thoughts).

எவ்வளவு கடினமான பயணமாக இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் கண்ட அந்தக் கனவை மறந்துவிடாதீர்கள். அந்த கனவு உங்களை உயிர்ப்போடும், உங்கள் லட்சியத்தை நோக்கி ஓட வைத்துக் கொண்டே இருக்கும்.

 

19

19

Help young and small people. Because small guys will be big. Young people will have the seeds you bury in their minds. When they grow up, they will change the world.

மிகச் சிறிய மற்றும் இளம் வயது மனிதர்களுக்கு உதவுங்கள். இன்றைய சிற்ய மனிதர்கள் நாலை பெரிய மனிதர்கள் ஆவார்கள். இன்று நீங்கள் இளைஞர்கள் மனதில் விதைக்கும் அந்த நல்லுணர்வு நாளை இந்த உலகையே மாற்றப் பயன்படுத்துவார்கள்.

 

20

20

I'm not a tech guy. I'm looking at the technology with the eyes of my customers, normal people's eyes.

நான் ஒரு டெக்னாலஜி வித்தகன் இல்லை, என் வாடிக்கையாளர்கள் பார்வையில் இருந்து டெக்னாலஜியைப் பார்க்கிறேன். அந்த சாதாரணக் கண்களில் இருந்து தான் டெக்னாலஜியைப் பார்க்கிறேன்.

 

21

21

Never ever do business with the government. Be in love with them, never marry them.

அரசுடன் எப்போது வியாபாரம் செய்யாதீர்கள். ஆனால் அரசோடு அன்பு செய்யுங்கள்... எச்சரிக்கை நிச்சயமாக திருமணமும் செய்யாதீர்கள்.

 

22

22

My job is to help more people have jobs.

நிறைய மக்களுக்கு வேலை கொடுத்து உதவுவது தான் என் வேலை

 

23

23

We should never finish a 20 year program in two years.

20 வருட திட்டத்தை இரண்டு ஆண்டுகளில் முடிக்காதீர்கள்.

 

24

24

If you've never tried, how will you ever know if there's any chance?

ஒரு விஷயத்தை முயன்று கூட பார்க்காமல், அதில் நமக்கு வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என எப்படிச் சொல்வீர்கள்.

 

25

25

Opportunity lies in the place where the complaints are

எக்கச்செக்க புகார்கள் இருக்கும் இடத்தில் தான் நமக்கான வாய்ப்பு ஒளிந்து கொண்டிருக்கிறது.

 

26

26

Today, making money is very simple. But making sustainable money while being responsible to the society and improving the world is very difficult

இன்று பணம் சம்பாதிப்பது மிக எளிதான காரியம்... ஆனால் நிலையாக பணம் சம்பாதிப்பது, அப்படி நிலையாக சம்பாதிக்கும் போது சமூகத்துக்கு பொறுப்பாக நடந்து கொள்வது, நாம் வாழும் இந்த உலகை மேம்படுத்துவது போன்றவைகள் தான் கஷ்டமானது.

 

27

27

A leader should have higher grit and tenacity, and be able to endure what the employees can't.

ஒரு ஊழியனால் செய்து முடிக்க முடியாததைக் கூட தைரியமாகவும், விடாபிடியாகவும் ஒரு தலைவன் செய்து காட்ட வேண்டும்.

 

28

28

You never know how much can you do in your life.

உங்கள் வாழ்கையில் எதை எல்லாம் சாதிக்க முடியும் என உங்களுக்கே தெரியாது.

 

29

29

I call myself a blind man riding on a blind tiger. Tiger is business and I am the business man

பிசினஸ் என்கிற குருட்டுப் புலியின் மீது சவாரி செய்யும் குருட்டு பிசினஸ் மேன் நான்

 

30

30

Instead of learning from other people's success, learn from their mistakes. Most of the people who fail share common reasons(to fail) whereas success can be attributed to various different kinds of reasons.

ஒருவரின் வெற்றிக் கதையை விட அவர்கள் தவறுகளில் பாடம் படியுங்கள். தோல்விக்கான காரணம் பெரும்பாலும் ஒன்றாகத் தான் இருக்கும். ஆனால் வெற்றிக் காண காரனம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: jack ma alibaba
English summary

jack ma's 30 most motivating quotes

jack ma's 30 most motivating quotes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X