நாட்டில் நிலவி வரும் பொருளாதார நிலையின் காரணமாக ஒரு நாள் பூராவும், வேலை செய்யும் தொழிலாளர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஏன் அடுத்த தினத்திலும் ஊழியர்கள் வரவில்லை எனில், இரவு பகல் பாராமல் உழைக்கும் நம்மவர் ஒரு புறம்.
இதே சீனாவை சேர்ந்த கோடிஸ்வரரான அலிபாபா குழுமத்தின் தலைவருமான ஜாக்மா, சீனாவின் தீவிர வேலை கலாச்சாரத்தில், செயற்கை நுண்ணறிவுடன் ஊழியர்கள், வாரத்தில் 12 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும் என்ற அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
மனிதர், தான் அவ்வப்போது, இப்படி ஏதேனும் ஒரு சர்ச்சையான கருத்துகளை கூறிவிட்டு, பின்னர் மாட்டிக் கொண்டு விழிப்பது ஒன்றும் புதிது இல்லை.
வாரத்தில் ஆறு நாட்கள் 996 வேலை
முன்னதாக இந்த வருடத்தின் முன்பு, வாரத்தில் ஆறு நாட்களும் வேலை செய்யலாம். இது இன்றைய இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் வரம் என்றும் கூறியிருந்தார். அதிலும் என்னைப் பொறுத்தவரை ஊழியர்கள் ஓவர்டைம் வேலை பார்ப்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகத்தான் பார்க்கிறேன். 996 என்ற அடிப்படையில் வேலைசெய்ய வேண்டும். இளைஞர்கள் இந்த வயதில் ஒருநாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யவில்லை என்றால், வேறு எப்போது செய்யப்போகிறீர்கள்? எனவும் கூறியிருந்தார். இதனால் ஒட்டுமொத்த சீனா ஊழியர்களின் கோபத்திற்கு ஆளானவர் என்றும் கூறலாம். சீனாவில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரம் ஆறு நாட்கள் வேலை பார்ப்பதை 996 என்றும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை
அதுமட்டும் அல்லாமல் பல நிறுவனங்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்யும் இந்த அருமையான வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்றும் முன்னர் கூறியிருந்தார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளார். இதனால் பலரின் கடுப்பையும் பெற்றுள்ளார் மனிதர்.
மனிதர்களுக்குள் சிப்கள் இல்லை
இந்த நிலையில் வாரத்தில் 12 மனி நேரம் பணி புரிந்தால் போதும் என்ற சர்ச்சையான கருத்தை தற்போது கூறியுள்ளார். மேலும் நான் வேலைகளை பற்றி கவலைப்படவில்லை. அதோடு மனிதர்கள் ஒன்றும் கணினிகள் அல்ல, சிப்களை வைத்திருக்க. அவர்கள் மனிதர்கள் அங்கு இதயம் மட்டும் தான் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
அடுத்து பள்ளியில் என்ன செய்வார்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக உள்ள ஜாக்மா, தான் சம்பாதித்த பணத்தையே செலவழிக்க தனது மீதி காலம் போதாது என கடந்தாண்டே ஓய்வு எடுக்க முடிவு செய்தார். அதன்படி, அலிபாபா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னரே அறிவித்திருந்தார். அதோடு மீண்டும் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால் பாவம் அவருக்கு தெரியவில்லை போலும், ஆசிரியராக இருந்தாலும் தினசரி எட்டு மணி நேரமாவது வேலை செய்ய வேண்டியிருக்குமே, அப்போது மனிதர் என்ன செய்வாரோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications