உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யா மீது தொடர்ந்து பல நாடுகளும் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் அசர மாட்டோம் என்பது போல ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
சமீபத்தில் தான் ஜப்பான் ரஷ்யா நெருங்கிய நட்பு நாடு என்ற அந்தஸ்தையும் ரத்து செய்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய சுற்று நடவடிக்கையினை அறிவித்துள்ளது.
ஜப்பானின் புதிய தடை
ஜப்பானின் இந்த முடிவால் ரஷ்யாவுக்கு மேற்கொண்டு அழுத்தம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் அறிவித்துள்ள புதிய தடையில் பல ரஷ்ய தனி நபர்களின் சொத்துக்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட பல ரஷ்ய பொருட்களுக்கு ஏற்றுமதியினை தடை செய்யவும் அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் தடை
சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் பிரதமர் உட்பட 63 ஜப்பானியர்களுக்கு ரஷ்யாவில் காலவரையின்றி நுழைய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பானது வெளியான சில தினங்களுக்கு பிறகு , ஜப்பான் அரசு புதிய தடைகளை விதித்துள்ளது.
அழுத்தம் அதிகரிக்கலாம்
இதனால் ரஷ்யாவுக்கு அழுத்தம் அதிகரிக்கலாம் என்பதோடு, மேற்கொண்டு ரஷ்யாவின் கோபமும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யாவின் வர்த்தக அந்தஸ்தினை அகற்றிய மாஸ்கோவிற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ரஷ்யாவின் எட்டு தூதரக அதிகாரிகள் வெளியேற்றுவது உட்பட பல முக்கிய நடவடிக்கைகளும் அடங்கும்.
பிரிட்டனின் புதிய தடை
இதற்கிடையில் பிரிட்டன் அரசும் புதிய தடை ஒன்றை விதித்துள்ளது. இந்த தடையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மோசமாக பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடையினால் பல வர்த்தகங்களும் பாதிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
சர்வதேச பொருளாதார பாதிப்பு
மொத்தத்தில் மாறி மாறி ரஷ்யா மீது உலக நாடுகளும், ரஷ்யா மற்ற நாடுகள் மீது தடை விதிப்பது, சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். இது சம்பந்தபட்ட நாடுகளை மட்டும் அல்லாமல், மற்ற நாடுகளிலும் தாக்கத்தினை எதிரொலிக்கலாம். ஏற்கனவே பல நாடுகளும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இன்னும் என்ன மாதிரியான பிரச்சனையெல்லாம் வெடிக்குமோ என்ற நிலையே இருந்து வருகின்றது.
மொத்தத்தில் இவ்விரு நாடுகளும் சமாதானத்திற்கு வந்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண முடியும். ஆனால் அது எப்போது என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது?
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications