ஜப்பான் நாடு தனது பாதுகாப்பு தன்மையை மேம்படுத்திகொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் போது, அமெரிக்க அதிபர் ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையில் இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறை குறித்து ஜப்பானிடம் பேசியுள்ளார்.
இந்த இரு காரணங்களையும் மையமாக வைத்து ஜப்பான் தற்போது அமெரிக்காவிடம் இருந்து சுமார் 100 எப்-35 ரகப் போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பான் உடன் பேச்சுவார்த்தை நடத்திய போது ஆயுதங்களையும், போர் கருவிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜப்பான் 42 எப் 35 ரக விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க தயாராக இருந்த நிலையில், டிரம்ப் வேண்டுகோளுக்கு இணங்க 100 விமானங்களை வாங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
இதன் மதிப்பு ஒரு டிரில்லியன் யென் அதாவது 8.8 பில்லியன் டாலர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications