ஜப்பானையும் பதம் பார்த்த கொரோனா.. மழுங்கி போன பொருளாதாரம்..!

ஜப்பான் ஆசிய கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான ஒரு நாடாகும். பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் ஒரு நாடு என்றும் அழைக்கப்படுகிறது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாகும். உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வரும் நிலையில், அது ஜப்பானையும் மிக மோசமாக பாதித்துள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டில் 7.8% ஆக சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது மிக மோசமான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அமைச்சரவை அலுவலகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

மோசமான வீழ்ச்சி

மோசமான வீழ்ச்சி

இது கடந்த 1980-லிருந்து ஒப்பிடும்போது மிக மோசமான ஒரு வீழ்ச்சி என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக இது மூன்றாவது காலாண்டிலும் சரிவினைக் கண்டு வருகிறது. ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் ஜப்பான் மற்ற முக்கிய பொருளாதாரங்களை விட சிறப்பாக செயல்பட்டது.

அமெரிக்கா & ஜெர்மனியும் வீழ்ச்சி

அமெரிக்கா & ஜெர்மனியும் வீழ்ச்சி

அமெரிக்கா மற்றும் ஜெர்மனி இரண்டும் முந்தைய காலாண்டில் முறையே 10% வீழ்ச்சியையும், இதே பிரிட்டீஸ் உற்பத்தியானது 20.4% வீழ்ச்சியினையும் பதிவு செய்துள்ளது.
மீதமுள்ள ஜி 7 பொருளாதாரங்களில், கனடாவின் புள்ளிவிவர நிறுவனம், இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டி உற்பத்தி இரண்டாவது காலாண்டில் 12% வீழ்ச்சி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் சீனா வளர்ச்சிக்கு திரும்பியது. அதாவது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு, மோசமான தொடக்கத்தினை தொடர்ந்து மந்த நிலையினை அடைந்தது.

ஏற்றுமதி வீழ்ச்சி

ஏற்றுமதி வீழ்ச்சி

ஆக இப்படி பல பொருளாதாரங்களைப் போலவே ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருக்கமானது, பெரும்பாலும் நுகர்வோர் செலவினங்களைப் குறைப்பதன் காரணமாக இருந்தது. ஏனெனில் கொரோனாவினை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன.

நுகர்வும் சரிவு

நுகர்வும் சரிவு

சொல்லப்போனால் நுகர்வானது முன்பை விட பாதியாக குறைந்துள்ளது. இது கிட்டதட்ட 6 வாரங்கள் பூட்டப்பட்ட நிலையில், மொத்த தொழில் துறை உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. இதோடு வெளிப்புற தேவை குறைவு காரணமாக, மொத்த உள் நாட்டு உற்பத்தியானது மூன்று சதவீத புள்ளிகளைக் குறைத்தது.

ஜப்பான் பாதிக்கப்படக் கூடும்

ஜப்பான் பாதிக்கப்படக் கூடும்

பிற முன்னேறிய பொருளாதாரங்களில் காணப்பட்ட வீழ்ச்சியினைப் போல பெரியதாக இல்லை என்றாலும், இரண்டாவது காலாண்டினை தொடர்ந்து மூன்றாவது காலாண்டிலும் வீழ்ச்சி காணலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஆக இது ஜப்பான் இன்னும் எதிர்மறையான பாதிப்புகளைக் சந்திக்கலாம் என்றும் அடிகோடிட்டு காட்டுகிறது.

பொருளாதாரம் எப்போது மேம்படும்

பொருளாதாரம் எப்போது மேம்படும்

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மீண்டும் செயல்பட்ட போதிலும், மீட்டெடுப்பின் வேகம் குறித்தும் கவலை தெரிவித்து இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு பொருளாதார தூண்டுதல் தொகுப்புகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏராளமான நிவாரண நடவடிக்கைகள், செப்டம்பர் மாதத்தில் காலாவதியாகும் என்று பல பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில் இனி அடுத்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எப்போதும் வரும், இதனால் பொருளாதாரம் எப்போது மேம்படும் என்று எதிபார்ப்புகள் எதிர் நோக்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு


ஜப்பானில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19,000 கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் 55,426 கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், 1,101 வைரஸ் சம்பந்தமான மரணங்கள் ஏற்பட்டுள்ளது. இது ஜப்பானிய ஹெல்த் மற்றும் லேபர் மற்றும் வெல்பேர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+