8 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் ஈரான் போரால் உலக பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது. கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டு, கப்பல் போக்குவரத்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் ஈரான் போர் குறித்த முக்கிய தகவலை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா ஈரான் போர் தொடங்கியது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தை மூடப்பட்டு கச்சா எண்ணெய் சப்ளை தட்டுபட்டுள்ளது.போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளுமே தோல்வி அடைந்துள்ளன. அமெரிக்காவும் ஈரானும் ஒரு ஒப்பந்தத்திற்கு வர மாட்டோம் என அடம் பிடிக்கின்றன.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2028-ஆம் ஆண்டுக்குள் ஈரான் போரை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டுவருவார் என ஜே.டி. வான்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா இது போன்ற நீண்ட கால முடிவில்லா போர்களில் ஈடுப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா-இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல்களை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்தியது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிக கப்பல்களும் தடை செய்யப்பட்டன. உலக எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த கடல் வழியாகத்தான் செல்கிறது. நிலைமையை சமாளிக்க அமெரிக்க கடற்படை அங்கு முற்றுகையை ஏற்படுத்தி, ஈரான் அல்லாத பிற வணிக கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக செல்ல வழிவகை செய்துள்ளது. இருந்தாலும் இங்கே நிலைமை இன்னும் சரியாகவில்லை.
ஈரான் போர் காரணமாக அமெரிக்க இடைக்கால தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் பேட்டியில் அமெரிக்க மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியின்படி, இனி அமெரிக்காவை எந்தவொரு முடிவில்லா போரிலும் சிக்கவைக்க மாட்டோம் என வான்ஸ் உறுதியளித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது என குறிப்பிட்ட அவர், டிரம்ப் இந்த விவகாரத்திலிருந்து நாட்டை வெற்றிகரமாக வெளியே கொண்டு வருவார் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளவும் தான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

