உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ் தனது ஆடம்பர வாழ்க்கை குறித்து அவ்வப்போது செய்திகளில் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் இந்திய க்ரீக் ஐலாந்தில் உள்ள பில்லியனர்கள் பங்க்கரில் அண்மையில் வாங்கிய ஆடம்பர மாளிகை பற்றிதான் ஊடகங்களில் எல்லாம் ஒரே பேச்சாக இருக்கின்றது.
ஜெஃப் பெசோஸ் தனது வருங்கால மனைவி தற்போதை கேர்ள்பிரெண்ட் Lauren Sanchez கேட்ட அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் ஒரு அறிவிப்பு வந்தது. 2.5 மில்லியன் டாலர் மதிப்பில் காஸ்ட்லியான வைர மோதிரத்தை தனது வருங்கால மனைவிக்கு அணிவித்த சில மாதத்தில் ஜெப் அவருக்காக 68 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு ஆடம்பர மாளிகை வாங்கியுள்ளார்.

இந்த ஆடம்பர மாளிகையில் 3 பெட்ரூம்கள், 3 பாத்ரூம்கள் உள்பட 9,259 சதுர அடி பரப்பில் இந்த மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகை 2.8 ஏக்கர் நிலப்பரப்புக்கு நடுவில் உள்ளது. பில்லியனர் பங்க்கர் தனக்கென்று முனிசிபாலிட்டி, மேயர், போலீஸ் படையைக் கொண்டுள்ளது. இங்கு உலகின் பெரும் பணக்காரர்கள், பிரபலங்கள் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மகள் இவானா டிரம்ப் போன்றோர் வசிக்கின்றனர்.
இந்தியன் க்ரீக் ஒரு பாலைவனச் சோலையாகும். 294 ஏக்கர் பரப்பில் 18 ஹோல் கோல்ப் மைதானம் என அகல விரிந்துள்ளது. இந்தப் பகுதியில் வெறும் 81 பேர்தான் குடியிருக்கின்றனர். இந்த ஆடம்பர மாளிகையோடு ஜெப் பெசோஸின் ரியல் எஸ்டேட் தாகம் முடியப்போவதில்லை என்று அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கு பக்கத்திலேயே 85 மில்லியன் டாலர் மதிப்புள்ள மற்றொரு சொத்தை ஜெப் விரைவில் வாங்குவார் என்று கூறப்படுகிறது. இது ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பை கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
நியூ மியாமி பகுதி வீடு பெசோஸின் பூர்வீகத்துக்கு மீண்டும் குடியிருக்கத் திரும்புவது போன்றது. அவர் மியாமி பால்மெட்டோ சீனியர் ஹைஸ்கூலில்தான் கடந்த 1982ல் படித்தார்.
பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஜெப் 165 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தை கடந்த 2020ஆம் ஆண்டு வாங்கினார். இது வாஷிங்டன் டி.சி.யில் அவர் வாங்கிய அதிக மதிப்புள்ள சொத்தாகும். இது தவிர ஹவாயில் 78 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு எஸ்டேட்டையும் ஜெப் வாங்கினார்.
அத்துடன் மெடினாவில் 5.3 கோடி மதிப்பில் ஒரு இடம் வாங்கியுள்ளார். டெக்ஸாசில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு பண்ணை வைத்துள்ளார். நியூயார்க் நகரத்தில் 100 மில்லியன் டாலர் மதிப்பில் ஃபிப்த் அவென்யூ அப்பார்ட்மென்டையும் விலைக்கு வாங்கியுள்ளார் ஜெப்.
விலை மதிப்பு அதிகமான சொத்துகளை ஜெப் பெசோஸ் குறிவைத்து வாங்கும் பழக்கம் இப்போது அதிகரித்துக் கொண்டே உள்ளது.


Click it and Unblock the Notifications