கெமிஸ்ட்ரி ஆசிரியர் உடன் திருமணம்.. உலகின் 3வது பணக்கார பெண் மெக்கென்சி ஸ்காட்-ன் திடீர் முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெக் நிறுவனமாகத் திகழும் அமேசான்.காம் தலைவர் ஜெப் பெசோஸ்-ன் கள்ள காதல் விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்த நிலையில், ஜெப் பெசோஸ்-ஐ அவரது மனைவி மெக்கென்சி ஸ்காட் விவாகரத்துச் செய்தார்.

இந்நிலையில் நீண்ட காலத்திற்குப் பின் உலகின் 3வது பணக்காரர் ஆக விளங்கும் மெக்கென்சி ஸ்காட் சியாட்டில நகரத்தைச் சேர்ந்த டேன் ஜூவெட் என்ற கெமிஸ்ட்ரி ஆசிரியரை காதலித்துத் திருமணம் செய்துள்ளார்.

மெக்கென்சி ஸ்காட் - டேன் ஜூவெட் திருமணம்

மெக்கென்சி ஸ்காட் - டேன் ஜூவெட் திருமணம்

உலகப் பணக்காரர்கள் தங்களது சொத்துக்களை நன்கொடையாக அளிக்க வலியுறுத்தும் வகையிலும், இதன் மூலம் பெறப்படும் நிதியைப் பல நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்த பில்கேட்ஸ், மெலின்டா கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் இணைந்து உருவாக்கிய Giving Pledge தளத்தின் மூலம் மெக்கென்சி ஸ்காட் - டேன் ஜூவெட் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் டேன் ஜூவெட்.

53.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

53.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

ஜெப் பெசோஸ், மெக்கென்சி ஸ்காட் விவாகரத்துச் செய்யச் சுமார் 38 பில்லியன் டாலர் மதிப்பிலான அமேசான் பங்குகளை வழங்கப்பட்டது. இந்தப் பங்குகளின் மதிப்புத் தற்போது 53.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மெக்கென்சி ஸ்காட் சுமார் 6 பில்லியன் டாலர் அளவிலான தொகையை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

மெக்கென்சி ஸ்காட் நன்கொடைகள்
 

மெக்கென்சி ஸ்காட் நன்கொடைகள்

மெக்கென்சி பெசோஸ் என இருந்து அவரது பெயரை விவாகரத்துக்குப் பின் மெக்கென்சி ஸ்காட் என மாற்றிக்கொண்டார். மேலும் விவாகரத்துக்கு முன்பாகப் பெரிய அளவில் நன்கொடை அளிக்காத மெக்கென்சி தற்போது தனது சொத்து மதிப்பில் பெரும் பகுதியை நன்கொடையாக அளித்து வருகிறார்.

3வது பணக்கார பெண்

3வது பணக்கார பெண்

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின் படி மெக்கென்சி ஸ்காட் தற்போது உலகின் 22வது பெரும் பணக்காரர் ஆகவும், பெண்கள் பட்டியலில் 3வது பெரும் பணக்காரர் ஆகவும் இருக்கிறார். இந்நிலையில் மெக்கென்சி ஸ்காட்-ன் புதிய கணவர் டேன் ஜூவெட்-ம் தனது சொத்துக்களில் பெரும் பகுதியை நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jeff Bezos' ex-wife MacKenzie Scott married to a chemistry teacher

Jeff Bezos' ex-wife MacKenzie Scott married to a chemistry teacher
Story first published: Tuesday, March 9, 2021, 15:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X