பில் கேட்ஸ்-க்கு அடுத்தது 'இவர்' தான்.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..!
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முன்னணிலை வகித்து வரும் வாரன் பபெட், அமேன்சியோ ஆர்டிகா ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பீசோஸ் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஏன் இந்தத் திடீர் மாற்றம்...?
துபாய்
அமேசான் நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Souq.com நிறுவனத்தைக் கைப்பற்றியது.
இதன் மூலம் 53 வயதான ஜெஃப் பீசோஸ்-இன் சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலர் வரை உயர்ந்து, அமேசான்.காம் இன்க் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 18.32 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
75.6 பில்லியன் டாலர்
புதிய நிறுவனம், வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றுதல் மூலம் ஜெஃப் பீசோஸ் சொத்து மதிப்பு 75.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இது Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவரான வாரன் பபெட்-ஐ விட 700 மில்லியன் டாலரும், ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரரான அமேன்சியோ ஆர்டிகா-வை விட 1.3 பில்லியன் டாலர் அதிகமானது.
ஒரு வருடத்தில் 10.2 பில்லியன் டாலர்
கடந்த ஒரு வருடத்தில் அமேசான்.காம் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பீசோஸின் சொத்து மதிப்பு 10.2 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்கத் தேர்தலுக்குப் பின் 7 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ப்ளூம்பெர்க் இன்டெக்ஸ்
இந்த வருடம் சீன நாட்டின் பார்சல் சேவை நிறுவன தலைவர் வாங் வே 18.4 பில்லியன் டாலரும், பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் 11.4 பில்லியன் டாலர் அளவில் இந்த வருடம் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் இன்டெக்ஸ் விவரங்கள் கூறுகிறது.
டெக் உலகம்
உலகளவிலான பில்லியனர்கள் பட்டியலில் தொழில்நுட்ப நிறுவனங்களை, சார்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பது இன்றைய நவீனமயமான உலகில் பெரிய விஷயம் இல்லை.
ஆயினும் பல வருடங்களாகத் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிறுவனரான பில் கேட்ஸ் உடன் போட்டி போட புதிதாக ஒருவர் உருவாகியுள்ளார் ஜெஃப் பிசோஸ்.
கிளவுட் சேவை
கடந்த சில வருடங்களாக அமேசான் நிறுவனத்தின் ஈகாமர்ஸ் சேவை மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் கிளவுட் சேவை உலகச் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற்றது. இதனால் ஜெஃப் பிசோஸ்-இன் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது.
வெற்றி ஜோடிகள்..!
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications