அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக தலைவர் ஜெஃப் பெசோஸ், சமீபத்தில் தனது நீண்ட கால காதலியை திருமணம் செய்துக்கொண்டார். உலகளாவிய பிரபலங்கள் மத்தியில் மிகவும் ஆரடம்பரமாக நடந்த இவர்களின் திருமணத்தை உலகமே வியந்து பார்த்தது.
ஜெஃப் பெசோஸ், தற்போது உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக உள்ளார், அவரது சொத்து மதிப்பு புளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீடின்படி 241 பில்லியன் டாலராக உள்ளது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்பு சில நாட்களில் தனது அமேசான் பங்குகளின் ஒரு பெரிய பகுதியை விற்றுள்ளார் ஜெப் பெசோஸ்.

அமெரிக்காவின் SEC மற்றும் புளூம்பெர்க் அறிக்கையின்படி, ஜெப் பெசோஸ் தனது திருமணத்திற்கு பின்பு 33 லட்சத்திற்கும் மேற்பட்ட பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 736.7 மில்லியன் டாலர், ஆதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6,300 கோடி ரூபாய் தொகையை பெற்றுள்ளார்.
இந்த பங்கு விற்பனை, பெசோஸின் திருமணத்திற்கு பின் உடனே நடந்ததால் கவனம் பெற்றுள்ளது. அவர் இத்தாலியின் வெனிஸ் நகரில் தனது ஆசை காதலியை லாரன் சான்செஸ் திருமணம் செய்து கொண்டார், மூன்று நாட்கள் நீடித்த திருமணம் சுமார் 420 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றது, இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், இந்த பங்கு விற்பனை திருமணத்துடன் நேரடியாக தொடர்பில்லை என்பது தான் உண்மை. இந்த பங்கு விற்பனை முன்பே திட்டமிடப்பட்டது. 2025 மார்ச் மாதத்தில் ஜெப் பெசோச்ஸ் தயாரிக்கப்பட்ட 10b5-1 வர்த்தக திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த பங்குகள் விற்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் மூலம் அமேசான் நிறுவனத்தில் இன்சைடர் டிரேடிங் பிரச்சனை வெடிக்க கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஜெப் பெசோஸ், அமேசான் உயர் அதிகாரிகள், அமேசான் பங்குதாரர்கள் சட்டபூர்வமாக பங்குகளை விற்க உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி, பெசோஸ் 2026 மே மாதம் வரை 25 மில்லியன் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளார். இது முந்தைய ஆண்டுகளில் அவர் 2023-இல் 75 மில்லியன் பங்குகளை 13.6 பில்லியன் டாலருக்கு விற்றதைப் போலவே தற்போதும் பங்குகளை விற்றுள்ளார். இந்த தொகையை வைத்து ஜெப் பெசோஸ் தனது பிற தொழில்களான புளூ ஆரிஜின் மற்றும் பிற தொண்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications