சீஇஓ பதவியில் இருந்து விலகிய ஜெப் பெசோஸ்-க்கு இனி என்ன வேலை..?!

உலகின் முன்னணி ஈகாரமஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான்.காம் ஷாப்பிங் சேவை மட்டும் அல்லாமல் கிளவுட் சேவையும் வழங்கி வரும் காரணத்தால் கடந்த சில ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெப் பெசோஸ் இந்நிறுவன சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜெப் பெசோஸ்-ன் இந்த முடிவு அமேசான் நிறுவன ஊழியர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த டெக் உலகையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்நிலையில் ஜெப் பெசோஸ் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், சிஇஓ பதவியில் இருந்து வெளியேறுவதால் தான் அமேசான்-ஐ விட்டு முழுமையாக வெளியேறப்போவது இல்லை.

அமேசான் நிர்வாகத்தின் தலைவராகப் பல புதிய திட்டங்களில் இனி வரும் காலத்தில் பணியற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமேசான் புதிய தலைவர்

அமேசான் புதிய தலைவர்

அமேசான்.காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ஜெப் பெசோஸ் வெளியேறிய நிலையில், இப்பதவியில் அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்பியூட்டிங் (AWS) பிரிவின் தலைவரான அன்டி ஜேசி புதிய சிஇஓ-வாக நியமிக்க உள்ளதாகவும் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெப் பெசோஸ் இனி வரும் காலத்தில் செய்யப்போவது இதுதான்.

அமேசான் புதிய திட்டங்கள்

அமேசான் புதிய திட்டங்கள்

சிஇஓ பதவியில் இருந்து விலகும் ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்ற உள்ளார். இவரது நிர்வாகத்தின் கீழ் அமேசான் நிறுவனத்தில் பல புதிய பிராடெக்-களையும், புதிய முயற்சிகளில் பணியாற்ற போவதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமேசான் புதிய வர்த்தகத்தில் இறங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

டே 1 பண்ட் அமைப்பு

டே 1 பண்ட் அமைப்பு

ஜெப் பெசோஸ் செப்டம்பர் 2018ல் உருவாக்கிய ஒரு தொண்டு நிறுவனம் தான் இந்த டே 1 பண்ட் (Day 1 Fund). இந்த நிறுவனத்தின் வாயிலாக வீடு இல்லாத மக்களுக்கு உதவி செய்யவும், குறைந்த வருமானம் கொண்ட மக்கள் நிறைந்துள்ள பகுதிகளில் ப்ரீ ஸ்கூல் அமைக்கும் பணிகளை இந்த அமைப்புச் செய்து வருகிறது. இனி வரும் காலத்தில் இத்திட்டத்தில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளார் ஜெப் பெசோஸ்.

ப்ளூ ஆர்ஜின் நிறுவனம்

ப்ளூ ஆர்ஜின் நிறுவனம்

எலான் மஸ்க் நிறுவனத்திற்குப் போட்டியாக ஜெப் பெசோஸ் விண்வெளி ஆராய்ச்சியில் பிரிவில் உருவாக்கிய ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தற்போது மலிவான விலையில் விண்வெளி பயணத்தை மேற்கொள்ளவும், மறுபடியும் பயன்படுத்தும் ராக்கெட்களை உருவாக்கும் பணிகளைச் செய்து வருகிறது. மேலும் 2024ஆம் ஆண்டுக்குள் நிலவுக்குச் செல்லும் ப்ளூ மூன் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. இத்திட்டத்தில் நேரடியாக இறங்க உள்ளார் ஜெப் பெசோஸ்.

பெசோஸ் எர்த் பண்ட்

பெசோஸ் எர்த் பண்ட்

ஜெப் பெசோஸ் கடந்த ஆண்டுச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பருவ கால மாற்றத்தைத் தடுக்கவும் விஞ்ஞானிகள், ஆர்வலர்கள், லாபமற்ற அமைப்புகள் மற்றும் இதைச் சார்ந்துள்ள அமைப்புகளுக்குச் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை நிதியுதவி அளிக்க உள்ளதாக அறிவித்தார்.

இதுவரையில் 16 பேரை சேர்வு செய்து 791 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அளித்துள்ளார்.

 

வாஷிங்டன் போஸ்ட்

வாஷிங்டன் போஸ்ட்

2013ல் ஜெப் பெசோஸ் அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட்-ஐ கைப்பற்றினார். இந்நிலையில் அடுத்த சில வருடத்தில் உலகின் முன்னணி ஆன்லைன் மீடியா நிறுவனமாக உயர்த்தும் பணியில் இறங்கியுள்ளார் ஜெப் பெசோஸ்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+