'ஜெப் பிசோஸ்' சமீபத்தில் பலரின் காதுகளில் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கும் ஒரு பெயர், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், பெர்க்ஷைர் ஹேத்தவே நிறுவனத்தின் தலைவர் வாரன் பபெட் ஆகியோரை மிகவும் குறைந்த காலகட்டத்தில் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தவர் தான் ஜெப் பிசோஸ்.
இந்நிலையில் ஜெப் பிசோஸ் உலகில் யாரும் அடைந்திராத 150 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
அமேசான் அதிரடி வளர்ச்சி
ஜெப் பிசோஸ் தலைவராக இருக்கும் அமேசான் நிறுவனத்தின் கிளவுட் சேவை மற்றும் ஈகாமர்ஸ் சேவைகள் கடந்த சில மாதங்களாகப் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது. குறிப்பாக இந்த வளர்ச்சி அமெரிக்காவை விட்டு வெளிநாடுகளில் சிறப்பாக இருக்கும் காரணத்தால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
150 பில்லியன் டாலர்
அமேசான் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் பிசோஸ் அவர்களிடம் இருக்கும் காரணத்தால், இவரின் சொத்து மதிப்புத் தற்போது 150 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது.
பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் 1999ஆம் ஆண்டு டாட் காம் கிளர்ச்சியில் முதல் முறையாக 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்தது. பணவீக்கத்தின் அடிப்படையில் இன்றைய நாணய மதிப்பிற்குப் பில்கேட்ஸின் 1999ஆம் ஆண்டு 100 பில்லியன் டாலரைக் கணக்கிட்டால், தற்போது அதன் மதிப்பு 149 பில்லியன் டாலர்.
1982க்குப் பின்
இந்நிலையில் இந்த உலகில் இதுவரை யாரும் அடைந்திராத சொத்து மதிப்பான 150 பில்லியன் டாலரை ஜெப் பிசோஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் 1982ஆம் ஆண்டுக்குப் பின், அதாவது மார்டன் வரலாற்றில் அதிகச் சொத்து மதிப்புடையவர் என்றால் அது ஜெப் பீசோஸ் தான்.
தள்ளுபடி விற்பனை
ஜெப் பிசோஸ் அவர்களின் நேற்றைய சொத்து மதிப்பு வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், அமேசான் தளத்தில் 36 மணிநேர தள்ளுபடி விற்பனை அமெரிக்கா, இந்தியா உட்படப் பல நாடுகளில் நடத்தினார்.
பங்கு மதிப்பு
இதன் மூலம் நியூயார்க் பங்குச் சந்தையில் இருக்கும் அமேசான் பங்குகளின் மதிப்பு 11.10 மணிக்கு அதிகப்படியாக 1,825.73 ரூபாயை அடைந்தது. மேலும் 2018ஆம் ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனப் பங்குகள் சுமார் 56 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜெப் பிசோஸ் அவர்களின் சொத்து மதிப்பும் 2018ஆம் ஆண்டில் 52 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மலை மலையாய் பணம்


Click it and Unblock the Notifications