தொழில்நுட்ப துறையில் எப்போது எலியும் பூனையுமாக இருக்கும் ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் மத்தியிலான போட்டியலில் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது ஆப்பிள். தோல்வியின் விளைவு 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.
சான் பிரான்சிஸ்கோ: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் சில வருடங்களுக்கு முன் கூகிள் நிறுவனத்திற்குப் போட்டி போடும் விதமாக ஆள்ளில்லா கார் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறையில் ஆராய்ச்சியில் இறங்கியது.
இதனால் கூகிள் நிறுவனம் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையே ஆடிப்போனது. காரணம் ஆப்பிள் நிறுவனம் தொட்டதெல்லாம் வெற்றி தான். ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் தனது ஆராய்ச்சியில் வெற்றி பெற்று இருந்தால் மொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது போல் ஆட்டோமொபைல் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பதே அவர்களின் பயம்.

ஆனால் தற்போது நிலையே வேறு, ஆப்பிள் நிறுவனம் ஆட்டோமோடிவ் துறையில் செய்து வந்த ஆராய்ச்சி மற்றும் திட்டங்களைக் கைவிடப் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆப்பிள் பட்டிப்படியாத இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீடு மற்றும் ஊழியர்களைக் குறைத்து வருகிறது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் துறையில் பணியாற்றும் 1,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் ஊழியர்கள் மட்ட அளவில் இதற்கான பணிகள் நடத்து வருகிறது.

2015ஆம் ஆண்டின் கடைசியில் இந்த ஆட்டோமோடிவ் குழுவிற்குக் கடைசி வாய்ப்பு அளித்தது. ஆனால் இக்குழு தனது திறமையை நிருபனம் செய்யத் தவறியதால் இப்பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஆள்ளில்லா கார் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் மிகப்பெரிய முதலீட்டில் தொடர்ந்து மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications