உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வர்த்தகம் என அனைத்தும் கொரோனா காலத்தில் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது அனைவருக்கும் தெரியும்.
இந்த மாபெரும் சரிவில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிதாக 2.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான இன்பராஸ்டக்சர் திட்டத்தை அடுத்த சில நாட்களில் நடைமுறைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறார்.
அமெரிக்காவின் உள்கட்டுமானத்தையும், அமெரிக்க வீடுகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டத்தைத் தீட்டி வருவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 10,000 பாலங்களைச் சரிசெய்வதில் துவங்கி, பல லட்சம் வீடுகளில் இருக்கும் Lead பைப்புகளை மாற்றுவது வரையில் அடங்குகிறது.
சாலை, ரயில் போக்குவரத்து - 650 பில்லியன் டாலர்
1. 20,000 மைல் நெடுஞ்சாலை மற்றும் சாலைகள், டாப் 10 பாலங்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட இதர பாலங்களை நவீனப்படுத்தல்
2. சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கான சாலை பாதுகாப்பு உருவாக்க 20 பில்லியன் டாலர், நெடுஞ்சாலை திட்டங்கள் வாயிலாகப் பிரிந்த கிராமக்களை இணைக்கும் பணிகளுக்கு 20 பில்லியன் டாலர்.
3. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த 85 பில்லியன் டாலர், Amtrak சேவைகளை மேம்படுத்த 80 பில்லியன் டாலர் முதலீடு.
4. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் திட்டங்களுக்காக விமான நிலையங்களுக்கு 25 பில்லியன் டாலர், துறைமுகம், நீர்வழி போக்குவரத்திற்கு 17 பில்லியன் டாலர் என மிகப்பெரிய அளவிலான திட்டத்தை வகுத்துள்ளார்.
எலக்ட்ரிக் கார் துறைக்கு 174 பில்லியன் டாலர்
அமெரிக்காவில் காற்று மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக எலக்ட்ரிக் கார் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகச் சுமார் 174 பில்லியன் டாலர் முதலீட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சப்ளை செயின் மற்றும் இக்கார்களை வாங்குவோருக்கு rebate அளிக்கவும் அமெரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
பள்ளிகளுக்கு 100 பில்லியன் டாலர்
அமெரிக்காவில் தற்போது இயங்கி வரும் பள்ளிகளை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் புதிதாகப் பல பள்ளிகளைக் கட்ட சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது ஜோ பைடன் தலைமையிலான அரசு. இதற்கான நிதியை பத்திர விற்பனை, நேரடி முதலீடுகள் வாயிலாகச் சரி செய்யத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க வீடுகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம்
அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அமெரிக்க வீடுகளை நவீனப்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ள பைடன் அரசு சுமார் 650 பில்லியன் டாலர் முதலீட்டில், பிராண்ட்பேன்ட், சுத்தமான குடிநீர், மின்சாரம், உயர் தரம் வாய்ந்த வீடுகளை மக்களுக்கு அளிக்கப் பைடன் அரசு திட்டமிட்டு வருகிறது.
மக்களின் 6 அடிப்படைத் தேவைகள்
இதேபோல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு 6 அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகச் சுமார் 400 பில்லியன் டாலர் ஒதுக்க உள்ளதாக வெள்ளி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
580 பில்லியன் டாலர்
இதோடு செமிகன்டாக்டர் உற்பத்திக்கு 50 பில்லியன் டாலரு், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு 180 பில்லியன் டாலரும், நிலக்கரி வர்த்தகம் மற்றும் சப்ளை செயின் துறையில் புதிய வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டங்களுக்காகவும் சுமார் 580 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு வருகிறது.
கார்ப்பரேட் வரி உயர்த்த முடிவும்
மேலும் இந்தத் திட்டங்களுக்கான நிதியைப் பெருமளவில் வரி மாற்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது அமெரிக்க அரசு. உதாரணமாகத் தற்போது நடைமுறையில் இருக்கும் 21 சதவீத கார்பரேட் வரியை 28 சதவீதமாக உயர்த்த டிரம்ப் அரசு முடிவு செய்தது. இதை எவ்விதமான மாற்றமும் செய்யாமல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடுகிறது பைடன் அரசு.
அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி
தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டங்கள் நடைமுறைக்கு வரும் போது அமெரிக்கப் பொருளாதாரம் ஆண்டுக்கு 0.5 சதவீதம் வளர்ச்சி அடையும். அடுத்த 15 வருடத்தில் தற்போது செலவு செய்யப்பட்டு உள்ள மொத்த பணத்தையும் அரசு திரும்பப் பெற முடியும், இதனால் அரசின் நிதிநிலையும் மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications