'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!

அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பிடன் திங்கட்கிழமை அந்நாட்டின் உற்பத்தியை மேம்படுத்தவும், அதன் வர்த்தகத்தை மேம்படுத்தவும் மேட் இன் அமெரிக்கா பொருட்களை ஊக்கப்படுத்தும் விதமாகப் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளார்.

இதில் முக்கியமாக அரசு அமைப்புகள் அனைத்தும் கட்டாயம் அமெரிக்காவில் தயாரித்த பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பெடரல் அமைப்புகள் வருடத்திற்குச் சுமார் 600 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்குக் கான்டிராக்ட் கொடுக்கிறது. இந்த வர்த்தகத்தை மொத்தமாக அமெரிக்க நிறுவனங்களுக்குச் செல்லும் வகையில் உத்தரவிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

 அமெரிக்க அரசு

அமெரிக்க அரசு

இந்த உத்தரவின் மூலம் அமெரிக்க அரசு நீண்ட காலமாகத் திட்டமிட்டு வரும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் முதல் படியை ஏறியுள்ளது. இந்த உத்தரவின் மூலம் அடுத்த சில வருடத்தில் அமெரிக்கத் தயாரிப்புகளின் தரம் உயர்வது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

 ஜோ பிடன் அரசு

ஜோ பிடன் அரசு

இப்புதிய உத்தரவு அமலாக்கம் செய்யப்படும் நிலையில் அமெரிக்காவின் உற்பத்தி அதிகரிப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்க நிறுவனங்களில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், வர்த்தகம் பெரிய அளவில் மேம்படும். இதனால் பெரிய அளவிலான உற்பத்தி சந்தை அமெரிக்காவில் அடுத்த சில வருடத்தில் உருவாக்க வாய்ப்புகள் உள்ளது.

 அமெரிக்காவின் திட்டம்

அமெரிக்காவின் திட்டம்

இந்நிலையில் மேட் இன் அமெரிக்கா என்பது வாங்கும் பொருட்கள் அனைத்தையும் அமெரிக்க நிறுவன தயாரிப்புகளாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது எனவும் அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிடன் அரசின் இந்தத் திட்டம் நீண்ட கால நோக்கில் அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி அளவீடு பெரிய அளவில் மேம்பட வாய்ப்புகள் உள்ளது என்பதையும் உணர வேண்டும்.

 600 பில்லியன் டாலர் வர்த்தகம்

600 பில்லியன் டாலர் வர்த்தகம்

அமெரிக்கா ஏற்கனவே சீன பொருட்களை இறக்குமதி செய்வதில் அதிகளவிலான வரி விதிப்பைச் செய்துள்ள நிலையில், அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதல்கட்டமாக அமெரிக்க அரசு அமைப்புகளின் 600 பில்லியன் டாலர் மதிப்பிலான கான்டிராக்ட் அமெரிக்க உற்பத்திகளுக்குச் செல்ல உள்ளது.

இது காலப்போக்கில் மக்கள் மத்தியிலும் அதிகரிக்கத் துவங்கும் போது அமெரிக்கச் சந்தையில் உற்பத்தி அளவீடுகள் மற்றும் அதைச் சார்ந்த வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது.

 

 டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்பட நாட்டின் உற்பத்தித் துறை மீண்டும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் அவரின் முக்கியக் கொள்கையாக இருந்தது. இதற்காக அவரது ஆட்சியில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தப் பல உத்தரவுகளை வெளியிட்டார்.

 உற்பத்தி திட்டம்

உற்பத்தி திட்டம்

இதேவேளையில் இந்தியா, வியட்நாம், பங்களாதேஷ், பிளிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அனைத்தும் சீனாவின் உற்பத்தி ஆதிக்கத்தைக் குறைக்க உற்பத்தித் துறை சார்ந்த வர்த்தகத்தைப் பெருமளவில் மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் உள்நாட்டுத் தேவையை மட்டும் அல்லாமல் வெளிநாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவிலான ஏற்றுமதி வர்த்தகத்தை அடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடித்தளம்.

 அமெரிக்காவின் முடிவு

அமெரிக்காவின் முடிவு

ஆனால் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா மேடு இன் அமெரிக்கா திட்டத்தை ஊக்கப்படுத்தும் நிலையில் இது பிற உற்பத்தி நாடுகளைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+