அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த சில மாதத்தில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வேளையில், திங்கட்கிழமை அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் கொள்கை பார்வை வரைவு அறிக்கையை வெளியிட்டார். இந்தப் பட்ஜெட் பார்வை அறிக்கை கிட்டத்தட்ட ஒரு தேர்தல் வாக்குறுதிக்கு இணையாகப் பார்க்கப்படும் வேளையில் இது கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு சுமார் 7.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான செலவின திட்ட அறிக்கையை வெளியிட்டார், இது தேர்தல் நேரம் என்பதால் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.

ஜோ பைடன் தனது இரண்டாவது நான்கு வருட பதவிக்காலத்தை அனுபவிக்க டார்கெட் செய்திருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தும், அந்நாட்டு மக்களிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்பையும், போட்டியையும் எதிர்கொண்டு வருகிறார். இதைச் சமாளிக்க இந்தப் பட்ஜெட் முன்திட்ட வரைவு பெரிய அளவில் உதவியுள்ளது.
இந்தப் பட்ஜெட் முன்வரைவு அறிக்கையில் பெருநிறுவனங்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மீதான வரிகளைக் கடுமையாக உயர்த்த திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளது. இது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டு இருக்கும் கோரிக்கை.
மேலும் நிதி பற்றாக்குறையைக் குறைக்க உதவுவதற்கும், வீட்டுவசதி மற்றும் குழந்தை பராமரிப்பு செலவுகளைக் குறைக்க அதிக மானியம் எனப் பல முக்கியத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளது.
இதில் முக்கியமாக NRI மக்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான், அக்டோபரில் தொடங்கும் அமெரிக்காவின் 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் வரைவு திட்டம் தான் இது.
இந்த அறிக்கையில் ஜோ பைடனின் கார்ப்பரேட் வருமான வரி விகிதத்தை 21% இலிருந்து 28 ஆக உயர்த்துதல், $400,000க்கு மேல் சம்பாதிப்பவர்கள் மீதான வரி விகிதங்களை உயர்த்துதல், $100 மில்லியன் சொத்து உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் குறைந்தது 25% வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஆகியவை அடங்கும்.
இந்த வரி விஷயம், அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் இந்தியர்கள், நிறுவன உரிமையாளர்களை பாதிக்கும்.
மேலும் அந்நாட்டில் இருப்பவர்கள் மருந்துச் செலவுகளைக் குறைக்க அரசு பேச்சுவார்த்தை நடத்த அனுமதித்தது. இதற்கிடையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்குக் குழந்தை வரிக் சலுகையை அரசாங்கம் திரும்பக் கொண்டுவரும், குழந்தைப் பராமரிப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்கும், வீடுகளைக் கட்டுவதற்கு $258 பில்லியன் தொகை உட்செலுத்தப்படும், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய குடும்ப விடுமுறை அளிக்கும், மேலும் வன்முறை குற்றத் தடுப்பு மற்றும் சட்ட அமலாக்கத்திற்காகப் பல பில்லியன்களைச் செலவிடும்.
10 ஆண்டுகளில் வருடாந்திர பற்றாக்குறை $3 டிரில்லியன் குறைப்பதாக உறுதியளிக்கிறது, இது அந்நாட்டின் 34.5 டிரில்லியன் டாலர் தேசிய கடனின் வளர்ச்சியை உடனடியாக நிறுத்தாது ஆனால் கடன் அளவின் வேகத்தைக் குறைக்கும்.
2025 நிதியாண்டில் நிதி பற்றாக்குறை மொத்தம் 1.8 டிரில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.1% ஆக இருக்கும், பத்தாண்டுகளில் 4%க்கும் கீழ் குறையும் என்று அமெரிக்க அரசு கணித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications