இங்கிலாந்து: உலக ஏழை மக்களின் சொத்து மற்றும் உடைமைகளின் பாதி, உலகின் டாப் 62 பணக்காரர்களிடம் உள்ளது என ஆக்ஸ்ஃபோம் என்னும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் சுமார் 94 நாடுகளில் இயங்கி வரும் ஆக்ஸ்ஃபோம் என்னும் பிரிட்டன் நாட்டுத் தொண்டு நிறுவனம், சர்வதேச அளவில் ஏழைகள் மற்றும் பணக்காரர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் பல முக்கியத் தகவல் கிடைத்துள்ளது.
62 பணக்காரர்கள்
உலக நாடுகளில் இருக்கும் 3.6 மில்லியன் ஏழை மக்களின் சொத்தில் பாதி அளவு, 2010ஆம் ஆண்டில் இருந்து சுமார் 41 சதவீதம் குறைந்துள்ளது என ஆக்ஸ்ஃபோம் தெரிவித்துள்ளது.
மேலும் இவர்களின் சொத்துக்களின் அளவு தற்போது உலகின் 62 டாப் பணக்காரர்களின் சொத்துக்களுக்கு இணையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
1.76 டிரில்லியன் டாலர்
மேலும் இந்த 62 பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்த சொத்து மதிப்பின் அளவுகள் 1.76 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
12 மாதம்
கடந்த 12 மாதத்தில் உலக நாடுகளில் இருக்கும் ஏழைகள் மற்றும் பணக்காரர்கள் மத்தியில் இருக்கும் வித்தியாசத்தின் அளவு 1 சதவீதத்திற்கு அதிகமான வித்தியாசத்தை எட்டியுள்ளது.
பணக்காரர்களின் எண்ணிக்கை
2015ஆம் ஆண்டில் 3.6 மில்லியன் ஏழை மக்களின் சொத்தில் பாதி அளவு 62 பணக்காரர்களிடம் இருக்கும் நிலையில், 2010ஆம் ஆண்டில் 388 ஆகவும், 2011ஆம் ஆண்டில் 177 ஆகவும், 2014ஆம் ஆண்டில் 80ஆகவும் 2015ஆம் ஆண்டில் 62 ஆகத் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதன் மூலம் சிவாஜி சொன்னது உண்மையானது.
சிவாஜி என்ன சொன்னார்..
இயக்குநர் ஷங்கரின் சிவாஜி படத்தில் ரஜினி, ஏழைகள் மேலும் ஏழையாகவும், பணக்காரர்கள் மேலும் பணத்தைச் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற வசனம் இருக்கும். அது தற்போது உண்மையாகியுள்ளது.
ஆய்வின் முடிவுகள்
உலகப் பொருளாதாரம் 2016 மாநாட்டை எதிர்நோக்கி ஆக்ஸ்ஃபோம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications