கராச்சி: பாகிஸ்தானில் நிலவு நிலையற்ற அரசின் வளர்ச்சிக் கராணமாக பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்கத் துவங்கியுள்ளனர், அதனால் இந்நாட்டு சந்தையில் அதிகம் முதலீடு செய்யும் அரபு நாடுகளும், தங்களது முதலீட்டை குறைத்துக் கொண்டு வருகிறது.

கராச்சி பங்கு சந்தையின் இன்றைய காலை வர்த்தக துவக்கத்தில் சுமார் 170 புள்ளிகள் சரிந்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கா டாலருக்கும் எதிரா பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் சுமார் 90 பைசா வரை உயர்ந்துள்ளது.
இச்சந்தையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுமார் 1,300 புள்ளிகள் வரை குறைந்து ஆட்டம் கண்டது குறிப்பிடதக்கது.
இதனால் இந்நாட்டில் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மேலும் கராச்சி பங்கு சந்தை சரிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இன்சூரன்ஸ் மற்றும் டெக்ஸ்டைல் துறை மீதான வர்த்தகத்தை தடை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications