கிரிப்டோ முதலீடுகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு அடைந்தாலும் உலக நாடுகளின் அரசுகள் தொடர்ந்து பல விதமான கட்டுப்பாடுகளையும், கண்காணிப்பு செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த கிளாபர் கான்டெஸ்டோ என்பவர் வெறும் 2 மாதத்தில் மில்லியனராக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி கிரிப்டோ முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்யும் பல கோடி இளம் முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்த்துள்ளது.
கிளாபர் கான்டெஸ்டோ
அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ்-ஐ சேர்ந்தவர் தான் 33 வயதான கிளாபர் கான்டெஸ்டோ எலான் மஸ்க் டோஜ்காயினுக்குத் தரும் ஆதரவுகளைப் பார்த்தும் வியந்து போனவர் தன்னுடைய சேமிப்பில் இருந்து பெரும் தொகையை டோஜ்காயினில் முதலீடு செய்துள்ளார்.
டோஜ்காயின் அதிரடி வளர்ச்சி
கிளாபர் கான்டெஸ்டோ பிப்ரவரி 5ஆம் தேதி தனது சேமிப்பில் இருந்து சுமார் 1,80,000 டாலரை டோஜ்காயினில் முதலீடு செய்தார். இவர் முதலீடு செய்யும் போது ஒரு டோஜ்காயின் விலை வெறும் 0.045 டாலர். ஆனால் ஏப்ரல் 15ஆம் தேதி இதன் விலை 0.45 டாலராக உயர்ந்தது.
10 மடங்கு வளர்ச்சி
இந்த 2 மாத காலத்தில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சியின் மூலம் ஏப்ரல் 15ஆம் தேதி கிளாபர் கான்டெஸ்டோ மில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சம்பாதித்துள்ளதாகத் தனது யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார். பிப்ரவரியில் இருந்து ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் டோஜ்காயின் சுமார் 10 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
யூடியூப் வீடியோ
மேலும் அந்த வீடியோவில் கிளாபர் கான்டெஸ்டோ-வின் ராபின்ஹூட் தளத்தின் ஸ்கீரின்ஷாட்-ம் பகிர்ந்துள்ளார், கிளாபர் கான்டெஸ்டோ இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். டோஜ்காயினில் முதலீடு செய்ய எலான் மஸ்க் முக்கியக் காரணம் என்றும் அவர் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா பிட்காயின்
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா பிட்காயினில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு செய்துள்ள நிலையில், மார்ச் காலாண்டில் 100 மில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
எலான் மஸ்க் - டோஜ்காயின்
இதேபோல் எலான் மஸ்க் தனது சொந்த முதலீட்டு வாயிலாக உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் டோஜ்காயின் மொத்த எண்ணிக்கையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு எலான் மஸ்க் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையான தகவலை எலான் மஸ்க் இதுவரை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications