இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் ஸ்டீல் தொழிலதிபரான லட்சுமி மிட்டல் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். சமீபத்தில் பிரிட்டன் நாட்டில் இருந்து பல பணக்காரர்கள், தொழிலதிபர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் ஓரே காரணம் வரி.
பிரிட்டன் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சண்டே டைம்ஸ்-ன் பணக்காரர்கள் பட்டியலில் எட்டு முறை முதலிடம் பிடித்தவர் லட்சுமி மிட்டல், பிரிட்டன் நாட்டை விட்டு வெளியேறி, இனி வரும் காலத்தை சுவிட்சர்லாந்து, துபாயில் செலவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் வணிக உலகில் முக்கிய இடம் வகித்த லட்சுமி மிட்டல், இப்போது புதிய வரி விதிகளால் நாட்டை விட்டு வெளியேறுகிறார் என்பது அந்நாட்டின் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் லட்சுமி மிட்டல்
1995ஆம் ஆண்டு தனது ஸ்டீல் தயாரிப்பு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், மொத்த ஐரோப்பிய வர்த்தகத்தையும் கைப்பற்ற வேண்டும் என இலக்குடன் 1995ஆம் ஆண்டு லண்டனுக்கு குடும்பத்துடன் குடியேறினார் லட்சுமி மிட்டல். தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய பல பில்லியன் டாலர் முதலீடு செய்தது மட்டும் அல்லாமல் பிரிட்டனில் பல முக்கியமான முதலீடுகளை செய்துள்ளார்.
லண்டனின் மிக விலையுயர்ந்த வீடுகளை வாங்கியவர் முக்கியமான பணக்காரர்களில் லட்சுமி மிட்டல் ஒருவர். குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் கால்பந்து கிளப்பில் முதலீடு செய்தவர். அந்நாட்டின் லேபர் கட்சிக்கு ஐந்து மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் நன்கொடை அளித்தவர்.
2008இல் அவரது சொத்து மதிப்பை பணவீக்கத்தை சரி செய்து கணக்கிட்டால் 27.7 பில்லியன் பவுண்டுகளாக இருந்தது, இது சண்டே டைம்ஸ் பட்டியலில் இதுவரை யாரும் எட்டாத உச்சம். 2025 பட்டியலில் லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 15.444 பில்லியன் பவுண்டுகளாக உள்ளது.
புதிய வரி விதிகள் தான் பிரச்சினையா?
பிரிட்டன் தற்போது ஆட்சியில் இருக்கும் லேபர் அரசு "Non-Dom" வரி சலுகையை ரத்து செய்தது லட்சுமி மிட்டல் அந்நாட்டை விட்டு வெளியேற முக்கிய காரணம். இந்த சலுகை மூலம் இங்கிலாந்தில் இருக்கும் வெளிநாட்டினர் அந்நாட்டில் ஈட்டிய வருமானத்துக்கு மட்டுமே வரி செலுத்தும் சலுகையை பெற்றனர். தற்போது அவர்கள் ஈட்டும் மொத்த வருமானத்திற்கும் வரியை செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
மறுபுறம் Inheritance Tax விதிப்பு முக்கியமான பிரச்சனையாக உள்ளது. அதாவது நீங்கள் பிரிட்டனில் இருந்தால், உங்களுக்கு சொந்தமாக உலக நாடுகளில் எங்கு சொத்துக்கள் இருந்தாலும், அவை பரம்பரையாக வந்திருந்தாலும், இதன் மூலம் வரும் வருமாத்திற்கு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இப்போது பெரும் பணக்காரர்கள் தங்களுடைய வர்த்தக நோக்கத்திற்காக உலகின் பல நாடுகளில் சொத்துக்களை வாங்கியும், பரம்பரையாக அவர்களது குடும்பம் பெற்று வருகின்றனர். இத்தகைய சொத்துக்களுக்கு 40 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என பிரிட்டன் அரசு கூறி வருகிறது.
துபாய், சுவிஸ்
இத்தகைய inheritance tax துபாய், சுவிஸ் நாட்டில் இல்லாத காரணத்தால் பிரிட்டன் பணக்காரர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பிரிட்டன் பொருளாதாரம் மோசமாக இருக்கும் வேளையில் பணக்காரர்களை குறிவைத்து வரி விதிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது பிரிட்டன் அரசு.
லட்சுமி மிட்டல் குடும்பத்தின் முடிவு
இந்த நிலையில் லட்சுமி மிட்டலின் நெருங்கிய வட்டாரம் ஒருவர் சண்டே டைம்ஸிடம் கூறுகையில், " தற்போது இக்குடும்பத்திற்கு வருமான வரியோ மூலதன ஆதாய வரியோ பிரச்சினை இல்லை. இன்ஹெரிட்டன்ஸ் வரி தான் பெரிய பிரச்சினை. உலகம் முழுவதும் உள்ள சொத்துகளுக்கு இங்கிலாந்து ஏன் வரி செலுத்த வேண்டும் என்று பல பணக்காரர்கள் புலம்பி வருகின்றனர். இதனால் வேறு வழியின்றி நாட்டை விட்டு செல்கின்றனர்" என்றார்.
தற்போது லட்சுமி மிட்டல் மட்டுமல்லாமல் பிரிட்டன் நாட்டில் இருந்து Improbable நிறுவனர் ஹெர்மன் நருலா, Revolut நிறுவனர் நிக் ஸ்டோரோன்ஸ்கி போன்ற தொழிலதிபர்களும் துபாய்க்கு சென்றுள்ளனர். வரி நிச்சயமற்ற தன்மை தான் முக்கிய காரணம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தில் இருந்து பணக்காரர்கள் வெளியேறுவது தொடர்ந்து நடக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications