மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் மரணமடைந்த இந்திய ஊழியர்: குடும்பத்தினர் கூறும் அதிர்ச்சி பின்னணி...

கலிபோர்னியா, அமெரிக்கா: உலகின் முன்னணி டெக் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சத்ய நாதெல்லாவே இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் தான். இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இந்திய ஊழியர் ஒருவர் அலுவலகத்தில் மரணமடைந்தது பல கேள்விகளை எழுப்புகிறது.

கலிபோர்னியாவில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவன அலுவலகத்தில் வேலை செய்து வந்தவர் தான் பிரதிக் பாண்டே . 35 வயதான இவர் ஆகஸ்ட் 20ஆம் தேதி வழக்கம் போல அலுவலகம் சென்றார், வேலை பார்த்தார் ஆனால் அடுத்த நாள் அதிகாலை இவர் வேலை செய்த டெஸ்கிலேயே மரணமடைந்து காணப்பட்டார். அதிகாலை 2 மணி அளவில் மரணமடைந்த நிலையில் இவருடைய உடல் மீட்கப்பட்டிருக்கிறது.

மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் மரணமடைந்த இந்திய ஊழியர்: குடும்பத்தினர் கூறும் அதிர்ச்சி பின்னணி...

வேலை செய்து வந்த டெஸ்கில் தலை சாய்ந்த நிலையில் இருந்ததை சக ஊழியர்கள் பார்த்து மீட்டு மருத்துவர்களை அழைத்து பரிசோதனை செய்திருக்கின்றனர். அதில் அவர் மரணமடைந்தது தெரிய வந்தது. முதல் கட்ட ஆய்வில் அவர் மாரடைப்பை ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து படிப்பு நோக்கத்திற்காக அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர் தான் பிரதீக் .

முதுநிலை படிப்பு முடித்த பிரதிக் பாண்டே ஆப்பிள், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களில் எல்லாம் வேலை செய்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு தான் அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் என்ஜினியராக பணிக்கு சேர்ந்தார். கடின உழைப்பாளி என உடன் பணிபுரிவோரும் குடும்பத்தினரும் கூறுகின்றனர். இவர் மிகவும் பாசிட்டிவான ஒரு நபர் என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் மரணமடைந்த இந்திய ஊழியர்: குடும்பத்தினர் கூறும் அதிர்ச்சி பின்னணி...

இரவு நீண்ட நேரம் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யக்கூடிய ஒரு நபர் என்றும் அவர் மரணமடைவதற்கு முன்னாடி நாள் இரவு 8 மணி அளவில் அவர் அலுவலகத்திற்கு சென்றார் என்றும் அவருடைய மாமா மனோஜ் தெரிவித்துள்ளார். பணி சார்ந்த அழுத்தங்கள் தான் அவருக்கு மாரடைப்பு வர காரணம் என கூறுகிறார். முதலில் இவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சந்தேகத்திற்கு இடமான எந்த தடையமும் கிடைக்கவில்லை என அமெரிக்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

கிரிமினல் செயல்கள் எதுவும் நடைபெற்றதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் கூறியிருக்கின்றனர். பணி சார்ந்த அழுத்தங்கள் தான் அவருடைய இந்த மாரடைப்பு மரணத்திற்கு காரணம் என அவரின் மாமாவான மனோஜ் வேதனை தெரிவித்து இருக்கிறார். மைக்ரோசாஃப்ட் உள்ளிட அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு பணி சார்ந்த ஏற்படக்கூடிய அழுத்தங்கள் அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தயவுசெய்து பாருங்கள் என வலியுறுத்தி இருக்கிறார். இது ஒரு ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு உதவும் என சுட்டிக்காட்டி இருக்க்கிறார்.

நன்றாக வேலைக்கு சென்ற ஒரு நபர் திடீரென மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியை தருகிறது என்பதை வார்த்தைகளால் கூறி விட முடியாது என தெரிவித்திருக்கிறார்.சில தினங்களுக்கு முன்னர் தனக்கு வேலை சார்ந்த அழுத்தங்கள் இருப்பதாக கூறியதாகவும் அவருக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சனையும் இல்லை என்றும் மனோஜ் கூறியிருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+