சில நேரங்களில் நாம் செய்யும் சிறு தவறுகள் பெரிய பிரச்சனையில் கொண்டு போய்விடும். ஆனால் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த புள்ளி விவர தகவல்கள் வெளியீட்டில் நிகழ்ந்த சிறு தவறு , நிறுவனத்தின் பங்குகளை திடீரென 67% உயர செய்தது.
இந்தியாவில் இயங்கும் ஓலா, உபர் , ரேபிடோ போல அமெரிக்கா போக்குவரத்து சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் தான் லிஃப்ட்(Lyft). 2024ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வளர்ச்சி விகிதம் எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்புகள் ஆகியவற்றை விளக்கும் செய்தியாளர் சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது.

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிஷர், செய்தியாளர்களிடம் அறிக்கையை வாசித்தார். அப்போது நிறுவனத்தின் வளர்ச்சி கணிப்பு 500 அடிப்படை புள்ளிகளாக இருக்கும் என அறிவித்தார்.
67% உயர்ந்த பங்குகள்: இந்த அறிவிப்பை அடுத்து லிஃப்ட் நிறுவனத்தின் மதிப்புகள் பங்குச்சந்தையில் எகிற தொடங்கின. கிட்டத்தட்ட 67 % பங்கு மதிப்புகள் உயர்ந்தன, முதலீட்டாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வழக்கமான நாளொன்று 13.6 மில்லியன் பங்குகள் வர்த்தகமாகும் நிலையில் திடீரென 47.8 மில்லியன் பங்குகளாக உயர்ந்து விலையும் அதிகரித்தது.
ஒரு பூஜ்யத்தை சேர்த்ததால் வந்த பிரச்னை: இதனிடையே மீண்டும் அறிக்கை வெளியிட்ட டேவிட் ரிஷர் நிறுவனத்தின் வளர்ச்சியான தகவலில் 50 அடிப்படை புள்ளிகள் என்பதற்கு பதிலாக 500 என தவறாக கூறிவிட்டேன் என விளக்கினார். இதனை அடுத்து பங்குகள் சரி செய்யப்பட்டு பழைய நிலைக்கு வந்தது.
இது முழுக்க முழுக்க என்னுடைய தவறு என ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த டேவிட் ரிஷர், இது மிக மோசமான தவறு , அதில் ஒரு பூஜ்யம் தான் இருந்தது, ஆனால் நான் தான் தவறாக கூறிவிட்டேன் என வருத்தம் தெரிவித்தார்.
இதனை அடுத்து பங்குகள் இயல்பு நிலையில் வர்த்தகம் ஆகின. இருப்பினும் வர்த்தகம் தொடங்கும் போது இருந்ததை விட 17% உயர்வுடன் முடிவடைந்தன.
உபர் நிறுவனத்துடன் கடும் போட்டி: அமெரிக்காவில் போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் உபர் நிறுவனத்துக்கும் லிஃப்ட் நிறுவனத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் லிஃப்ட் நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது.
அமெரிக்காவில் இந்த துறையில் 30 % பங்கினை லிஃப்ட் கொண்டுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் லிஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் 15% அதிகரித்துள்ளது.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications