தென் கொரியாவின் 4வது மிகப்பெரிய மற்றும் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் குளோபல் பிரான்டாக விளங்கும் முன்னணி நிறுவனமான எல்ஜி குரூப்-இன் தலைவர் கூ பான் மூ கடந்த ஒரு வருடமாக மூளை நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மறைந்தார்.
கூ பான் மூ தனது 73 வயதில் மூளை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் மறைந்தார் என எல்ஜி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

எல்ஜி நிறுவனத்தின் 3வது தலைவராக 1995இல் தனது 50 வருடத்தில் தலைவராகப் பதவியேற்றினார். கூ பான் மூ தலைமையில் எலக்ட்ரினிக்ஸ், கெமிக்கல்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் பிரிவு வர்த்தகத்தைத் துவக்கினார்.
இந்நிலையில் கூ பான் மூ அவர்களின் மகன் தற்போது நிர்வாகத்தின் உயர் மட்ட குழுவில் இருக்கும் காரணத்தால் அவர் கூ பான் பதவியை ஏற்பார் எனவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications