எலான் மஸ்க் வியாழக்கிழமை தனது ட்விட்டர் கணக்கில் டிவிட்டர் அல்லது x.com நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியைக் கண்டுபிடித்ததாகவும், தான் சிஇஓ பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு எலான் மஸ்க் டிவிட்டர் பதிவில் Twitter நிறுவனத்தின் புதிய CEO ஆக லிண்டா யாக்காரினோ-வை வரவேற்கிறேன். லிண்டா யாக்காரினோ வர்த்தக செயல்பாடுகளை கவனித்துக்கொள்வார், நான் பிராடெக்ட் டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்ப பணிகளை கவனித்துக்கொள்வேன் என தெரிவித்தார்.

லிண்டா யாக்காரினோ உடன் இணைந்து டிவிட்டர் தளத்தை X, the everything app ஆக உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
எலான் மஸ்க் வியாழக்கிழமை டிவீட்டிலேயே சிஇஓ பதவியில் இருந்து விலகி, எக்ஸ்கியூட்டிவ் சேர்மன் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பை ஏற்க உள்ளதாக தெரிவித்தார். இப்பதவியில் இருந்துக்கொண்டு டிவிட்டர் நிறுவனத்தின் ப்ராடெக்ட், சாப்ட்வேர், சிஸ்டம் ஆப்ரேஷன்ஸ் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் விளக்கினார்.
எலான் மஸ்க் கணக்கே இதுதான், அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து நிறுவனத்திலும் அவர் முக்கியமான தொழில்நுட்ப பதவியை வகித்து வருகிறார். உதாரணமாக டெஸ்லா சிஇஓ-வாக இருந்தாலும், இந்நிறுவனத்தின் product architect எலான் மஸ்க் தான். இதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் chief engineer எலான் மஸ்க் தான். மற்ற போரிங் கம்பெனி, நியூராலிங்க் போன்ற நிறுவனங்கள் சிறியது என்பதால் தலைவராக மட்டுமே உள்ளார், ஆனாலும் தொழில்நுட்ப அளவில் இவர் தான் வழிகாட்டி.
இதேபோல் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியை, டெஸ்லா முதலீட்டாளர்கள் நெருக்கடி காரணமாக விட்டுகொடுத்தாலும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி மூலம் மொத்த நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உள்ளார். சரி யார் இந்த லிண்டா யாக்காரினோ..?
அமெரிக்காவில் பிரபலமான மாஸ் மீடியா மற்றும் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமான என்பிசி யுனிவர்சல்-ன் விளம்பரப் பிரிவின் தலைவரான லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) அடுத்த டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. Linda Yaccarino குறித்து முக்கியமான விஷயங்கள்.

லிண்டா யாக்காரினோ LinkedIn ப்ரொபைல் படி, 2011 முதல் NBC யுனிவர்சல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது தற்போது சேர்பர்சன் பதவியில் இருந்துக்கொண்டு உலகளாவிய விளம்பரம் மற்றும் கூட்டாண்மை பிரிவை நிர்வாகம் செய்து வருகிறார். இதற்கு முன், கேபிள் பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் விளம்பர விற்பனைப் பிரிவின் தலைவராக பணியாற்றினார்.
லிண்டா யாக்காரினோ Turner நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றினார். Turner நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது நிர்வாக துணைத் தலைவர்/சிஇஓ பதவியில் விளம்பர விற்பனை, மார்கெட்டிங் மற்றும் கையகப்படுத்துதல் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.
லிண்டா யாக்காரினோ அமெரிக்காவின் பென் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் முன்னாள் மாணவர், இப்பல்கலைக்கழகத்தில் லிப்ரல் ஆர்ட்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் பிரிவில் பட்டம் பெற்றார்.
இதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை டிவீட்டில் எலான் கூறும் X ஆப் என்பது என்ன..?
எலான் மஸ்க் X என்னும் the everything app என்பது ஒரு சூப்பர் ஆப் போல இத்தளத்தில் சமுக வலைத்தளம் முதல் பேமெண்ட், ஷாப்பிங் வரையில் அனைத்தும் இருக்கும். இதற்கு எளிய உதாரணம் சீனாவின் WeChat.
WeChat செயலில் சேட்டிங் சேவை மட்டும் அல்லாமல் தினமும் மக்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் இதில் இருக்கும், இதனால் சீன மக்கள் WeChat செயலியை விட்டு வெளியே வருவதே இல்லை என்பது தான் உண்மை.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications