அமெரிக்கா- சீனா வர்த்தக போரினால் உலோகங்களின் விலை வீழ்ச்சி.. கவலையில் உற்பத்தியாளர்கள்

லண்டன் : கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லெட் (LEAD)விலை குறைந்துள்ளதாம். அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகபோர் காரணமாக தொழில்துறைகளில் உலோகங்களின் தேவை குறையலாம் என்ற அனுமானத்தினாலேயே உலோகங்களின் விலை குறைந்துள்ளதாம். அதிலும் குறிப்பாக லெட்டின் விலை மிகக் குறைந்து காணப்பட்டது.

எனினும் இந்த பதற்றமான சூழ்நிலையிலும் கூட அலுமியத்தின் விலை அதிகரித்தே வர்த்தகமானது. இதற்கு காரணம் சீனாவில் அலுமியத்திற்கான தேவை அதிகரித்ததே இதற்கு காரணம் என்றும் கருதப்படுகிறது.

அமெரிக்கா- சீனா வர்த்தக போரினால் உலோகங்களின் விலை வீழ்ச்சி.. கவலையில் உற்பத்தியாளர்கள்

சீனாவில் தொழிற்துறையில் தேவையான மூலம் பொருட்களில், குறிப்பாக அலுமினியம் சம்பந்தமான பொருட்களின் இறக்குமதி குறைந்ததாகவும் வந்த அறிக்கையை அடுத்து இந்த உலோகத்தின் விலை அதிகரித்ததாம்.

அமெரிக்கா சீனா ஒப்பந்தம் இன்னும் சரியான பேச்சுவார்த்தையே முடியாத போது, ஒப்பந்தம் பற்றி இது கவலை கொள்ளும் விதமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக உலோகங்களை அதிகளவில் உபயோகப்படுத்தும் சீனாவிலும் சரி, இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவிலும் சரியானதொரு நிலை இல்லை.

இந்த இரண்டு நாட்டிற்கும் இடையே நிலவி வரும் வர்த்தக போர் காரணமாக அந்த உலோக சந்தைகள் மற்ற நாடுகளின் சந்தைகளோடு சேர்ந்து வீழ்ச்சியடைய துவங்கியுள்ளது.

சமீப காலத்தில் லெட்டின் மறுசுழற்சி செய்யப்படும் தொழில் ஆரோக்கியமானதாக இருந்ததால் லெட்டின் விலை அவ்வளவாக மாற்றம் இல்லாமல் இருந்தது.

லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் லெட் இருப்பு 1.3% குறைந்து
$ 1,798 டன்னுக்கு குறைந்துள்ளதாம். இது ஆகஸ்ட் 2016 விட தற்போது தான் இந்த அளவுக்கு குறைந்துள்ளதாம்.

இதே அலுமினியத்தின் உற்பத்தியை எடுத்துக் கொண்டால் சீனாவில், அலுமினியம் உற்பத்தியால் ஏற்படும் மாசு காரணமாக உற்பத்தி குறைக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதனால் அலுமினியம் உற்பத்தி 4% குறையலாம் என்றும் நிபுனர்கள் கூறுகின்றனராம்.

இதே காப்பரின் விலை 0.7% குறைந்து டன்னுக்கு $6,083 குறைந்துள்ளது. இதே ஜிங்க் 1% குறைந்து $2,605 ஆகவும், இதே நிக்கல் 0.8% குறைந்து $11,835 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.

எனினும் வரப்போகும் வாரங்களில் அமெரிக்கா - சீனா இடையேயான ஒப்பந்தம் சரியாகாவிட்டால் இதே நிலை தொடரும் என்றும் என்றும் நிபுனர்கள் கூறுகிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+